திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனாதிபதி முர்மு சுவாமி தரிசனம்
2022-12-06@ 00:29:13

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்தார். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று முன்தினம் இரவு திருப்பதி வந்தார். இரவு திருமலையில் தங்கி நேற்று காலை ஏழுமலையானை தரிசித்தார். அவரை திருமலை திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் சுப்பா, துணை முதல்வர் நாராயணசாமி, ஒன்றிய அமைச்சர் கிஷன்ரெட்டி, அமைச்சர் ரோஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்து வைத்தனர். தொடர்ந்து, லட்டு உள்ளிட்ட தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
பின்னர், அலிபிரியில் உள்ள கோ சப்த பிரதட்சண மந்திரத்தில் பார்வையிட்டு பசுவுக்கு பூஜை மேற்கொண்டு பசு எடைக்கு நிகரான 435 கிலோ தீவனங்களை காணிக்கையாக வழங்கினார். இதற்கான ரூ.6 ஆயிரம் தொகையை கோ பிரதட்சணம் மந்திர அதிகாரிகளிடம் வழங்கினார். தொடர்ந்து, பத்மாவதி பல்கலை மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார் பின்னர், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து டெல்லி சென்றார். 24 மணிநேரம் காத்திருப்பு: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் 80,001 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகமாக உள்ளதால், பக்தர்கள் சுமார் 24 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் ெபற்ற பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
Tags:
Tirupati Eyumalayan Temple President Murmu Swami Darshanam திருப்பதி ஏழுமலையான் கோயில் ஜனாதிபதி முர்மு சுவாமி தரிசனம்மேலும் செய்திகள்
அக்னி வீரர் பணியிடங்கள் முதலில் நுழைவு தேர்வு: ராணுவம் அறிவிப்பு
குழந்தை திருமணங்களுக்கு எதிராக தொடர் போராட்டம்; அசாம் அரசு நடவடிக்கை சிறுமிகளின் நிலை என்ன?.. ஓவைசி கேள்வி
பைக் மீது லாரி மோதியதில் சிறுவன் பலி எதிரொலி: 22 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்
மாஜி இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது மனைவி பரபரப்பு புகார்
உலக புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேஷன் ஷோ: பார்வையாளர்கள் வரவேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!