டெல்லி மதுபான ஊழல் புகார்: நாளை நான் ரொம்ப ‘பிஸி’ : தெலங்கானா முதல்வர் மகள் சிபிஐக்கு கடிதம்
2022-12-05@ 15:26:39

புதுடெல்லி: டெல்லி மதுபான ஊழல் புகாரில் சிக்கிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா, நாளை விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. வரும் 6ம் தேதி (நாளை) உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, கே.கவிதா அளித்த ேபட்டியில், ‘நான் எந்த விசாரணையும் எதிர்கொள்ள தான் தயாராக இருக்கிறேன்.
சிபிஐ, அமலாக்கத்துறை என எந்த அமைப்புகள் கேள்விகள் கேட்டாலும் அதற்கு பதில் சொல்ல தயாராக உள்ளேன்’ எனக் கூறினார். இந்நிலையில் சிபிஐ-க்கு கே.கவிதா எழுதியுள்ள கடிதத்தில், ‘நீங்கள் கூறியது போல், என்னால் டிச. 6ம் தேதி விசாரணைக்கு ஆஜராக முடியாது. அந்த நாளில் எனக்கு முன் திட்டமிட்ட நிகழ்ச்சிகள் உள்ளன. அந்த நாளுக்கு பதிலாக வரும் 11, 12, 14 அல்லது 15 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் எனது ஐதராபாத் இல்லத்தில் என்னை அதிகாரிகள் சந்தித்து விசாரிக்கலாம்’ என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
ராமர் சிலை செய்ய நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்த பாறை: சிறப்பு பூஜை செய்து வழிபாடு
நாடாளுமன்ற துளிகள்...
நாகாலாந்தில் காரில் ரூ.1 கோடி வைத்திருந்த பெண் கைது
தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: ரூ.22.76 கோடி செலவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!