தமிழ்நாட்டில் சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால் அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
2022-12-05@ 11:49:40

சென்னை: தமிழ்நாட்டில் சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால் அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சத்துணவு மையங்களை கணக்கெடுக்க ஆணையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மையங்களை கணக்கெடுக்கும் நோக்கம், சத்துணவை ஏதேனும் ஓரிடத்தில் தயாரித்து வழங்குவதாகத்தான் இருக்க வேண்டும். இந்த திட்டம் தமிழகத்தின் அடையாளமாக திகழும் சத்துணவு திட்டத்தை வலுவிழக்க செய்யும், அதன் நோக்கத்தை சிதைத்துவிடும். மாணவர்களுக்கு சூடான உணவை சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்கவே பள்ளி வளாகத்தில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஓரிடத்தில் உணவு சமைத்து பல கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு செல்லும்போது உணவு ஆறிவிடும். தமிழ்நாடு முழுவதும் 43,190 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் உள்ளன. புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் சுமார் 28,000 சத்துணவு மையங்களை மூட வேண்டிய நிலை உருவாகும். புதிய திட்டத்தால் சுமார் 85,000 பணியிடங்கள் ரத்து செய்யப்பட நேரிடும். எனவே தமிழ்நாட்டில் சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால் அரசு கைவிட வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள்
கன மழை காரணமாக நெற்பயிர் பாதித்த உழவர்களுக்கு உரிய இழப்பீடு அன்புமணி வலியுறுத்தல்
அண்ணா நினைவுநாளையொட்டி இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை
4 லட்சம் பேர் எழுதுகின்றனர் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடங்கியது: சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
குற்ற வழக்குகளில் மின்னணு ஆதாரங்களை சேகரிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
எல்.ஐ.சி, எஸ்பிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் சார்பில் 6ம் தேதி ஆர்ப்பாட்ட பேரணி: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
இந்திய சினிமாவின் பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!