தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்களை போட்டி தேர்வின்றி பணி நியமனம் செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்
2022-12-05@ 03:38:22

சென்னை: தகுதித் தேர்வு முடித்த ஆசிரியர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்யவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:
2021ம் ஆண்டு ஜூன் 3ம் தேதியன்று ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுட்காலத் தகுதிச் சான்றிதழாக ஒன்றிய அரசு மாற்றி அமைத்துவிட்டது. அதற்கான அறிவுரைகளும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன. எனவே, இதற்கான சட்ட வழிவகைகள் குறித்து ஆராயும் பணி தமிழ்நாடு அரசுக்கு இல்லாமல் போய்விட்டது.
அதே சமயத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலைவாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் என பல போராட்டங்களை நடத்திவிட்டார்கள். மறு நியமன போட்டித் தேர்வுக்கான அரசாணையை ரத்து செய்துவிட்டு, காலிப் பணியிடங்களை போட்டித் தேர்வின்றி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வைத்து நிரப்ப வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இணையதள பக்கம் ‘ஹேக்’ காவல் ஆணையரிடம் மக்கள் நீதி மய்யம் புகார்
தமிழ்நாட்டில் மதுவிலக்கு தேவை அன்புமணி வலியுறுத்தல்
மோடிக்கு எதிரான ஆவண படம் திரையிட்ட மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது: வேல்முருகன் கண்டனம்
மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நிற்கக்கோரி நாளை ரயில் மறியல்: வைகோ அறிவிப்பு
வேட்பாளரும் இல்ல, சின்னமும் இல்ல என்னத்த சொல்லி ஓட்டு கேக்க? எடப்பாடி அணி புலம்பல்
தேமுதிக போட்டி ஏன்? வேட்பாளர் விளக்கம்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!