மின் இணைப்பு எண்ணுடன் ஒரே வாரத்தில் 50 லட்சம் பேர் ஆதார் எண் இணைத்தனர்: மின்வாரியம் தகவல்
2022-12-05@ 03:28:35

சென்னை: தமிழகம் முழுவதும் மின் இணைப்பு எண்ணுடன் ஒரே வாரத்தில் 50 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கட்டுள்ளது.
அதன்படி, கடந்த மாதம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான மின்நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு மின்வாரியம் குறுந்தகவல் அனுப்பியது. நேரடியாக மின் கட்டணம் செலுத்துபவர்கள், ஆதார் அட்டையின் நகலை எடுத்து சென்று ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இதனிடையே, ஆதார் இணைப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்களிடையே நிலவியது. குறிப்பாக 100 யூனிட் இலவச மின் திட்டம் நிறுத்தப்படுமா, மின் கட்டணம் செலுத்த முடியாமல் போகுமா என மின்நுகர்வோர் குழப்ப நிலையில் இருந்தனர்.
இந்நிலையில், பொதுமக்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள மின் கட்டண அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி, கடந்த மாதம் 28ம் தேதி தமிழகம் முழுவதும் 2,811 சிறப்பு முகாம்கள் திறக்கப்பட்டன. இதில், பொதுமக்கள் நேரடியாக வந்து ஆதாரை இணைத்து கொள்ளலாம் என மின்துறை அறிவித்தது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் ஆதாரை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டிருந்தது.
மேலும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அந்தந்த மின் கட்டண அலுவலகங்களில் விழிப்புணர்வு பாதாகைகள் வைக்கப்பட்டன. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை நீண்ட நேரம் வரிசையில் காக்க வைக்காமல் எளிதில் ஆதாரை இணைக்க முக்கியத்துவம் வழங்கப்பட்டன. அதேபோல், செல்போன் மற்றும் கணினி வாயிலாக ஆன்லைன் மூலம் பலர் ஆதாரை இணைத்தனர்.
அந்த வகையில், தமிழகம் முழுவதும் மின் இணைப்பு பெற்றுள்ள 2.37 கோடி மின்நுகர்வோரில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு முகாம் மற்றும் ஆன்லைன் மூலமாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை ஒரே வாரத்தில் இணைத்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விடுமுறை தினமான (ஞாயிற்றுகிழமை) நேற்று சிறப்பு முகாம்கள் செயல்பட்டதால் பொதுமக்கள் ஆர்வமுடன் ஆதாரை இணைக்க வந்த வண்ணம் இருந்தனர்.
மேலும் செய்திகள்
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர் பெயர் இல்லாதது தவறு: பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டி
இன்று கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் மறியல்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு
பிரபல இயக்குனர், நடிகர் டி.பி.கஜேந்திரன் திடீர் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
துர்கா ஸ்டாலின் சகோதரி மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: இன்று மாலையில் உடல் தகனம்
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!