கண்ணூர் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்தது கடலில் தத்தளித்த 13 மீனவர்கள் மீட்பு
2022-12-05@ 00:08:43

திருவனந்தபுரம்: கொச்சியிலிருந்து 7 தமிழக மீனவர்கள் உள்பட 13 பேருடன் மீன்பிடிக்கச் சென்ற படகு கண்ணூர் அருகே நடுக்கடலில் கவிழ்ந்தது. இவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.கொச்சி முனம்பத்திலிருந்து ஜெகன் என்பவருக்கு சொந்தமான ஷைஜா என்ற படகில் கடந்த 20 நாட்களுக்கு முன் 13 மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக புறப்பட்டு சென்றனர். இவர்களில் 7 பேர் குமரி மற்றும் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். 5 பேர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
நேற்றுமுன்தினம் மாலை படகில் ஏற்பட்ட ஒரு துளை மூலம் கடல் நீர் உள்ளே புகத்தொடங்கியது. சிறிது நேரத்திலேயே படகு முற்றிலுமாக கவிழ்ந்தது. இதையடுத்து மீனவர்கள் அனைவரும் கடலுக்குள் குதித்தனர். இதுகுறித்து ஹாம் ரேடியோ மூலம் காசர்கோடு பேக்கல் கடலோர போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பேக்கல் போலீசார் கண்ணூர் அழிக்கோடு கடலோர போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர்கள் படகில் விரைந்து சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 13 மீனவர்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
மேலும் செய்திகள்
ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் தோட்டம் இனி அமிர்த தோட்டம்: பெயரை மாற்றியது ஒன்றிய அரசு
ஹிண்டன்பர்க் அறிக்கையால் ரூ.2.40 லட்சம் கோடி காலி உலக பணக்காரர்கள் பட்டியலில் 7ம் இடத்திற்கு பின்தங்கிய அதானி: இது வெறும் ஆரம்பம்தான்
புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அனைத்து தரப்புக்கும் அதிகாரமளிக்க அரசு உழைக்கிறது: பிரதமர் மோடி பேச்சு
உணவு சப்ளை செய்யும் வீடுகளில் பெண்களிடம் அத்துமீறும் ஆன்லைன் டெலிவரி பாய்: நெருங்கி பழகி கடத்திச்சென்று பலாத்காரம்
2024 மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்க்க காங்கிரசை மையமாக வைத்தே எதிர்க்கட்சி கூட்டணி அமையும்: ஜெய்ராம் ரமேஷ் பேட்டி
டெல்லியில் குடியரசு தினத்தின் நிறைவாக முப்படை வீரர்கள் இன்று பாசறை திரும்பும் நிகழ்ச்சி: 3,500 டிரோன் ஷோவுக்கு ஏற்பாடு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!