பாகிஸ்தான் எல்லையில் டிரோன் மூலம் கடத்திய 3 கிலோ ஹெராயின் பறிமுதல்
2022-12-05@ 00:08:28

சண்டிகர்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு டிரோனில் கடத்திய 3 கிலோ ஹெராயின் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். பாகிஸ்தானில் இருந்து போதை பொருட்கள் பஞ்சாப் எல்லை பகுதிக்குள் டிரோன் மூலம் கடத்துவது அதிகரித்துள்ளது. டரன் டரன் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து போலீசார் நடத்திய வேட்டையில் டிரோனில் கடத்திய 3 கிலோ ஹெராயின் சிக்கியது.
இதுகுறித்து மாநில டிஜிபி கவுரவ் யாதவ் டிவிட்டரில் பதிவிடுகையில்:
டரன் டரன் மாவட்டத்தில் உள்ள வல்தோகாவில் டிரோனில் இருந்த 3 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். இதே போல் நேற்று முன்தினம் பசில்கா மாவட்டத்தில் டிரோன் மூலம் இந்திய எல்லைக்குள் போடப்பட்ட 25 கிலோ ஹெராயினை பிஎஸ்எப் வீரர்கள் கைப்பற்றினர்.கடந்த 1ம் தேதியன்று டரன்டரன்னில் டிரோனில் இருந்து 5 கிலோ போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
உலக புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேஷன் ஷோ: பார்வையாளர்கள் வரவேற்பு
ராகுல்காந்தி உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை
சன்னிலியோன் நிகழ்ச்சி அருகே குண்டு வெடிப்பு: மணிப்பூரில் பரபரப்பு
உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு: கொலிஜீயம் பரிந்துரைக்கு அரசு ஒப்புதல்
ஜவுளி துறைக்கு வரப்பிரசாதம் 90% தண்ணீரை குறைக்கும் நானோ தொழில்நுட்பம்: ஐஐடி ரோபர் கண்டுபிடிப்பு
முதலில் ஆன்லைன் தேர்வு அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!