ஆற்காட்டில் நள்ளிரவு வீடு புகுந்து கொடூரம் தாய், மகளை பலாத்காரம் செய்து நிர்வாண வீடியோ எடுத்த காமவெறியன்: வெளியே காவலுக்கு நின்ற 2வது மனைவியுடன் கைது
2022-12-05@ 00:06:39

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மாசாப்பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கர் என்கின்ற பகுடு பாஸ்கரன்(33). இவர் 5 பெண்டாட்டிக்காரர். முதல் மனைவி இறந்தபின், 2வது மனைவி துர்கா(30)வுடன் வசிக்கிறார். அதே பகுதியில் கன்னியாகுமரியை சேர்ந்த 40 வயது பெண், மகன் மற்றும் மகளுடன் வசிக்கிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ஆற்காட்டில் குடியேறினார். ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்கிறார். அவரது மகள் ஆற்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.
இந்நிலையில், அந்த பெண்ணிடம் பாஸ்கரன் அவ்வப்போது பேச்சு கொடுப்பாராம். ஆனால் அவர் கண்டுகொள்வதில்லை. மேலும் பாஸ்கரின் 2வது மனைவி துர்காவுக்கும் அந்த பெண்ணுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் பகுடு பாஸ்கரை போலீசார் குண்டாஸில் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர். கடந்த 27ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரிடம் அந்த பெண் அடிக்கடி தகராறு செய்வதாக துர்கா கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கரன் கடந்த 28ம் தேதி இரவு 11 மணிக்கு மனைவியுடன், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளே நுழைந்துள்ளார். வெளிப்புறம் கதவை பூட்டிக்கொண்டு துர்கா காவலுக்கு நின்றார்.
பின்னர், பாஸ்கர் கத்தியை காட்டி மிரட்டி அந்தப் பெண்ணை கட்டி போட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அந்த பெண்ணின் மகளான மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் நிர்வாணமாக நிற்க வைத்து செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தாராம். அவரை கழிவறையில் தள்ளி பூட்டிவிட்டு அந்த பெண்ணையும் பாலியல் பலாத்காரம் செய்து, நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார். மறுநாள் அதிகாலை 3 மணி வரை பலாத்காரம் செய்த பகுடு பாஸ்கரன் வீடியோ மற்றும் போட்டோ பதிவு செய்ததாக தெரிகிறது.
இதை வெளியே சொன்னால் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி அந்த பெண்ணை தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அந்த பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இதையடுத்து, போக்சோ உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் பகுடு பாஸ்கர், துர்காவை நேற்று கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
கலெக்டரின் தந்தையை தாக்கி நகை கொள்ளை
அவிநாசி அருகே ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கிய கல்யாண ராணி கைது: 3வது கணவரை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றபோது சிக்கினார்
வேறு நபருடன் நிச்சயம் செய்ததால் ஆத்திரம் ஓடும் ஆட்டோவில் காதலியின் கழுத்தை அறுத்த காதலன் கைது: காதலுக்காக கப்பல் வேலையை துறந்தவர் கம்பி எண்ணுகிறார்
பள்ளி மாணவர்கள் மோதல்; கல்வீச்சு
ரூ.12.49 கோடி கோயில் நிலம் மோசடி சென்னை தம்பதி, புதுவை விஏஓ கைது
தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கி பெண்ணுக்கு கொலை மிரட்டல் அதிமுக நகர செயலாளர் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!