போலீசுக்கு மிரட்டல் பாஜ நிர்வாகி கைது
2022-12-05@ 00:05:46

காங்கயம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து காங்கயத்துக்கு அரசு பஸ் ஒன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்தது. இதில் பாஜ தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, காங்கயம் போலீஸ்காரர் ரமேஷ் பயணித்தனர். அந்த பஸ்சில் ஆண் ஒருவர், ஒரு பெண்ணின் காலை மிதிக்கவே அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
போலீஸ்காரர் ரமேஷ் அதுபற்றி கேட்டபோது பாஜ தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, போலீஸ்காரரை மிரட்டியுள்ளார். இதுபற்றி போலீஸ் அதிகாரிகள், இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது பாஜ நிர்வாகி ராஜா, போலீஸ்காரரை ஒருமையில் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிந்து பாஜ நிர்வாகி ராஜாவை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
கலெக்டரின் தந்தையை தாக்கி நகை கொள்ளை
அவிநாசி அருகே ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கிய கல்யாண ராணி கைது: 3வது கணவரை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றபோது சிக்கினார்
வேறு நபருடன் நிச்சயம் செய்ததால் ஆத்திரம் ஓடும் ஆட்டோவில் காதலியின் கழுத்தை அறுத்த காதலன் கைது: காதலுக்காக கப்பல் வேலையை துறந்தவர் கம்பி எண்ணுகிறார்
பள்ளி மாணவர்கள் மோதல்; கல்வீச்சு
ரூ.12.49 கோடி கோயில் நிலம் மோசடி சென்னை தம்பதி, புதுவை விஏஓ கைது
தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கி பெண்ணுக்கு கொலை மிரட்டல் அதிமுக நகர செயலாளர் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!