சொத்து, நகை, சிலை தொடர்பாக ஸ்கேன் செய்யபோகும் ஆவணம் குறித்து அறிக்கை தர வேண்டும்: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு
2022-12-05@ 00:04:41

சென்னை: கோயில் ஆவணங்களை பாதுகாக்கும் வகையில், ஒளி வருடல் செய்து மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆணையர் குமரகுருபரன், மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஆணையர் அலுவலகம் மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் ஒளிவருடல் செய்யப்பட்டு மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. கோயில்களில் உள்ள சட்டப் பிரிவு 29 பதிவேடுகள் உள்ளிட்ட முக்கிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் பழமையாகி பாதுகாக்க வேண்டிய நிலையில் இருப்பதால், உடனடியாக அவற்றை ஒளிவருடல் செய்து மென்பொருளில் சேமிக்க வேண்டியது அவசியம்.
அது தொடர்பாக விவரங்களை உடன் சேகரித்து பாதுகாக்க வேண்டிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இதனை கணக்கெடுத்து மண்டல இணை ஆணையர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.ஏற்கனவே ஒளிவருடல் செய்து மென்பொருளில் சேகரிக்கப்பட்ட தரவுகள் உடனடியாக, அந்தந்த கோயில் தலைப்பின் கீழ் பொதுமக்கள் பார்வைக்கும், இத்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கும் வலைதளத்தில் ஏற்ற வேண்டும். தற்போது ஒவ்வொரு கோயிலுக்கும் தனியே ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை திட்ட எண் வழங்கப்பட்டு, அந்த எண்ணின் கீழ் ஒளிவருடல் செய்யப்பட்ட அந்த கோயில் ஆவணங்கள் அந்த கோயிலுக்கு பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியமாகும்.
இதற்காக கோயில்களில் ஒளிவருடல் பணிகளை மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக கோயில்களில் உள்ள சட்டப்பிரிவு 29 உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளின் எண்ணிக்கை அவற்றின் பக்கங்களின் எண்ணிக்கை விவரங்களை அறிக்கையாக அனுப்பி வைக்க மண்டல இணை ஆணையர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் செய்திகள்
மோட்டார் வாகன சட்டப்படி சரியாக இல்லாத நம்பர் பிளேட் 27,891 வாகனங்கள் மீது வழக்கு
மதுரவாயல் - துறைமுகம் இடையே ரூ.5, 800 கோடியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க ஒப்புதல்: சுற்றுச்சூழல் நிபுணர் குழு வழங்கியது
போஸ்டல் லைப் இன்சூரன்சுடன் எதை இணைக்க வேண்டும்?
சொத்துவரி செலுத்த தவறினால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை: மாநகராட்சி எச்சரிக்கை
2ம் நாளாக ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ நிகழ்வில் அரசின் நலத்திட்டங்கள் பெற மக்களை அலைக்கழிக்க கூடாது: கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு
அரசுப் பள்ளி மாணவியர்களின் தற்காப்பு கலை பயிற்சிக்கு ரூ.1,838 லட்சம் ஒதுக்கீடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!