SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய நம்பிக்கை

2022-12-05@ 00:04:08

ஆடுகளை மேய்ப்பவர் ஒரேயொரு ஆட்டை தனது தோளில் தூக்கி சுமந்து வருகிறார் என்றால், அந்த ஆடு நடக்க முடியாத நிலையில் உள்ளது என்று அர்த்தம். இதுதான் சமூகநீதி என்றவர் கலைஞர். மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக அரசை போல நன்மை செய்தவர்கள் யாரும் இருக்க முடியாது. ஊனமுற்றோர் என்ற சொல்லை உச்சரிக்க கூடாது என கருதி, அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் என்ற புதிய பெயரை சூட்டியதும் கலைஞர்தான். மாற்றுத்திறனாளிகளுக்கு என தனித்துறையை உருவாக்கி, அந்த துறையை தனது கட்டுப்பாட்டிலே அவர் வைத்துக் கொண்டார். அவரது வழியொட்டி இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் அத்துறையை தனது பொறுப்பிலே வைத்திருப்பதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகளை அள்ளிக் கொடுத்தும் வருகிறார்.

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் கால் நனைக்க தமிழக அரசு வசதிகள் செய்து கொடுத்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் அலுவலகங்களுக்கு செல்ல சாய்வு தள பாதைகள், அவர்களுக்கென தனி கழிப்பறைகள், அரசு பேருந்துகளில் தனி இருக்கைகள், பேருந்துகளில் கட்டண சலுகைகள் என பல்வேறு வசதிகளை திமுக அரசுதான் செய்து கொடுத்தது. நான் முதல்வன் திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினி, மென்பொருளுடன் கூடிய திறன் பயிற்சிகள் வழங்கிடவும் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல் நேற்று முன்தினம் வருவாய்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு, அதற்கான தொகையை வரும் ஜனவரி முதல் ரூ.1000த்தில் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்பட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேர் தமிழகத்தில் பயன்பெற உள்ளனர். இதற்காக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.263 கோடியே 58 லட்சம் கூடுதல் செலவாகும். இதனால் தமிழகத்தில் ஓய்வூதியம் பெறும் மாற்றுத் திறனாளிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அலுவலகங்களுக்கு சென்று பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் கூட இல்லத்தில் இருந்தே பணி செய்யலாம் என்ற சூழலை தமிழக அரசு உருவாக்க தயாராகி வருகிறது. அப்படியொரு சூழல் வந்தால், அவர்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைவர். பயணங்களில் ஏற்படும் சிரமங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு வெகுவாக குறையும்.

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பிரெய்லி தட்டச்சு இயந்திரம், காது கேளாதவர்களுக்கு கருவிகள், பேசும் கைக்கடிகாரங்கள் என மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்டங்கள் தோறும் தற்போது எண்ணிலடங்கா நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படக்கூடிய தாழ்வு மனப்பான்மை, அவர்கள் மீது பொதுமக்கள் காட்டும் அலட்சியம் ஆகியவற்றை அகற்றவும் தமிழக அரசு தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு பொருளாதார சலுகைகள் மட்டுமின்றி, உளவியல் ரீதியாக பிரச்னைகளையும் சரி செய்ய தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஏராளம். ஒரேயொரு மாற்றுத் திறனாளி கூட மன வருத்தம் அடையக்கூடாது. ஒருவருக்கு நன்மை பயக்கும் என்று சொன்னால் கூட அதை செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழியும் வார்த்தைகளில் இருந்தே அவர் மாற்றுத் திறனாளிகள் மீது எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

 • pet-fesitival-mumbai

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

 • france-reform

  பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

 • new-parliament-pic-20

  பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

 • cong-ravi-19

  தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்