சுரங்க வெடிவிபத்து பாக்.கில் 6 பேர் பலி
2022-12-05@ 00:04:00

கராச்சி: பாகிஸ்தானில் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர். பாகிஸ்தான், பலுச்சிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இதில் நேற்று முன்தினம் 1,500 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் நிலக்கரி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென காஸ் வெடித்ததில் தீப்பிடித்தது. தீ பரவியதில் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் மற்றும் தொழிலாளர்கள் விரைந்து சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 5 பேரின் உடல்களை மீட்பு படையினர் மீட்டனர். மேலும் ஒருவரின் உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும் செய்திகள்
பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள பாக்.கில் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு
ஈரானின் ராணுவ ஆலை மீது டிரோன் தாக்குதலால் பதற்றம்: இஸ்ரேலுக்கு தொடர்பு?
பாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்து 42 பயணிகள் பரிதாப பலி
பிரபல இசைக் கலைஞரான டாம் வெர்லைன் மரணம்
அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி: ஒரு வாரத்தில் 12 பேர் மரணம்
ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி; 440 பேர் படுகாயம்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!