ஏற்கனவே ராஜினாமா செய்த நிலையில் ராஜ்யசபா எதிர்கட்சி தலைவராக கார்கே நீடிப்பு: காங்கிரஸ் பொதுச் செயலாளர் தகவல்
2022-12-04@ 16:43:00

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராஜ்ய சபா எதிர்கட்சி தலைவராக தொடர்ந்து செயல்படுவார் என்று பொதுச் செயலாளர் ெஜய்ராம் ரமேஷ் கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. வரும் 7ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ளதால், அது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களிடம் கூறுகையில், ‘மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே (காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படும் முன், கார்கே தனது மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்) தொடர்வது குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கவில்லை.
நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தியும், எங்கள் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கேவும் உள்ளனர். இந்த விவகாரத்தை ஆலோசனைக் குழு கூட்டத்தில் விவாதிக்க முடியாது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் கட்சியின் தலைவராக மட்டுமின்றி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் தொடர்ந்து செயல்படுவார். அவர் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படுவார்’ என்றார்.
மேலும் செய்திகள்
பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: பொன்குமார் அறிக்கை
பட்ஜெட்டில் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி: அன்புமணி குற்றச்சாட்டு
அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை: பாலகிருஷ்ணன்
2வது நாளில் 10 பேர் வேட்பு மனு காங்கிரஸ், இபிஎஸ் அணி, அமமுக வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல்
எடப்பாடி கேட்டால் கையெழுத்து பாஜவுடன் முறையான அறிவிப்பு: ஓபிஎஸ் புது குழப்பம்
உடுக்கை அடித்து ஓட்டு சேகரிக்கும் குடுகுடுப்பை கோவிந்தன்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!