ராகுல் காந்தியின் பாதயாத்திரை 88-வது நாளாக இன்று காலை மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது
2022-12-04@ 12:20:09

ஜெய்ப்பூர்: ராகுல் காந்தியின் பாதயாத்திரை 88-வது நாளாக இன்று காலை மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை பயணம், கடந்த மாதம் 23-ம் தேதி மகாராஷ்டிராவிலிருந்து மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்திற்குள் நுழைந்தது.
88-வது நாளாக இன்று காலை மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் நகுல் நாத், முன்னாள் மத்திய மந்திரி அருண் யாதவ், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரியவ்ரத் சிங் ஆகியோரும் இந்த அணிவகுப்பில் ராகுல் காந்தியுடன் நடந்து சென்றனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் புர்ஹான்பூர், கந்த்வா, கர்கோன், இந்தூர் மற்றும் உஜ்ஜைனி மாவட்டங்களை கடந்து மொத்தம் 380 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை நடைபெற்றுள்ளது. இந்த பாத யாத்திரையின்போது உஜ்ஜயினியில் உள்ள 12 ஜோதி லிங்கங்களில் ஒன்றான மகா காளேஸ்வரர் கோயிலுக்கு சென்ற ராகுல்காந்தி வழிபாடு நடத்தினார். இந்நிலையில் இன்று மாலை ராஜஸ்தான் மாநிலத்திற்குள் ராகுலின் யாத்திரை நுழைகிறது.
அங்குள்ள சான்வ்லி கிராமத்தில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் உறுப்பினர்கள், ராஜஸ்தானை சேர்ந்த கட்சி உறுப்பினர்களிடம் தேசியக் கொடியை ஒப்படைக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அம்மாநில காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
ராமர் சிலை செய்ய நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்த பாறை: சிறப்பு பூஜை செய்து வழிபாடு
நாடாளுமன்ற துளிகள்...
நாகாலாந்தில் காரில் ரூ.1 கோடி வைத்திருந்த பெண் கைது
தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: ரூ.22.76 கோடி செலவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!