உலகக்கோப்பை கால்பந்து 2022: 2வது சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டங்கள்!
2022-12-04@ 10:58:17

தோகா: இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பிரான்ஸ் - போலாந்து அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும்.
அதன்படி, நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா (எச்) ஆகிய 16 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.
இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்தும், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அர்ஜெண்டினா அணியும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின. இந்த நிலையில், இன்று நடைபெறும் 2வது சுற்று போட்டியில் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பிரான்ஸ் - போலாந்து அணிகள் மோதுகின்றன. பின்னர் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து-செனகல் அணிகள் மோதுகின்றன.
மேலும் செய்திகள்
உலக கோப்பை ஹாக்கி தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா
நியூசிலாந்துடன் இன்று 2வது டி20 பதிலடி தருமா இந்தியா?
யு-19 மகளிர் டி20 உலககோப்பை பைனல் இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதல் முறையாக சபலென்கா சாம்பியன்
முதல் ஒரு நாள் போட்டி இங்கிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா: ஜேசன்ராய் சதம் வீண்
ஆடுகளம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது; கூடுதலாக 25 ரன் கொடுத்தது தான் தோல்விக்கு காரணம்: ஹர்திக் பாண்டியா பேட்டி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!