மக்கள் போராட்டம் தீவிரம் பணிந்தது சீன அரசு: கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு
2022-12-04@ 01:50:13

பீஜிங்: சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததால், கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தி உள்ளது. சீனாவில் கொரோனா தொற்றுக்கு தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பரவலை தடுக்க பல நகரங்களில் ஊரடங்கு, கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. இதனால், அதிபர் ஜின்பிங் பதவி விலகக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. மாணவர்களும், அரசுக்கு எதிராக நூதன முறையில் போராடி வருவதால் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்ததால் பீஜிங், ஷிஜியாங்சுவாங், தையூன் உட்பட பல்வேறு நகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
தொழில்துறை நகரமான குவாங்சோவில் தனிமைப்படுத்துபவர்களை தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படுவதற்கு பதிலாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என்று கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பீஜிங், தியான்ஜின், செங்டு மற்றும் ஷென்சென் போன்ற நகரங்களில் பொது போக்குவரத்துக்கான கட்டாய கொரோனா பரிசோதனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. செங்டு மற்றும் குவாங்சோவில் வசிப்பவர்கள், பெரும்பாலான பொது இடங்களுக்குள் நுழையும்போது கொரோனா சோதனை முடிவுகளைக் காட்டத் தேவையில்லை என்று சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பீஜிங்கில் ஷாப்பிங் மால்கள் திறக்கப்பட்டுள்ளது.
Tags:
People's protest surrender Chinese government Corona restrictions relaxation மக்கள் போராட்டம் பணிந்தது சீன அரச கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுமேலும் செய்திகள்
நவாஸ் மகள் மரியம் நாடு திரும்பினார்
செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு
இங்கிலாந்தில் கவுரவம் இந்திய இளவரசிக்கு நீல வில்லை விருது
கறுப்பின வாலிபர் பலி அமெரிக்காவில் மக்கள் போராட்டம்: 5 போலீசார் கைது
நேரடி, மறைமுக வரிகளை எளிமையாக்க வேண்டும்: இந்தியாவுக்கு அமெரிக்கா கோரிக்கை
இஸ்ரேலில் பதற்றம் மதவழிபாட்டு தலத்தில் 7 பேர் சுட்டுக்கொலை
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!