ராஜஸ்தானில் 5 பேர் கும்பல் துணிகரம் பிரபல தாதா உட்பட 2 பேர் சுட்டு கொலை
2022-12-04@ 01:42:30

சிக்கார்: ராஜஸ்தானில் 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி உட்பட 2 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். ராஜஸ்தானை சேர்ந்த பிரபல ரவுடி ராஜூ தேத் நேற்று சிக்காரில் உள்ள தனது வீட்டு வாசலில் நின்றிருந்தார். அப்போது 5 பேர் கும்பல் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. இதில் ராஜூ தேத் உள்பட 2 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தையடுத்து சிக்கார் நகரில் பதற்றம் ஏற்பட்டு கடைகள் அடைக்கப்பட்டன. துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பலியான இன்னொருவர் தாராசந்த் என கண்டறியப்பட்டுள்ளது. தாராசந்த்தை ராஜூ தேத்தின் உதவியாளர் என சந்தேகத்தில் அவரை சுட்டு கொன்றுள்ளனர். ராஜூ தேத்துக்கும், ஆனந்தபால் சிங் என்ற ரவுடிக்கும் பகை இருந்து வந்தது. 2017ம் ஆண்டு நடந்த என்கவுன்டரில் ஆனந்த்பால் சுட்டு கொல்லப்பட்டான். அதற்கு பழிவாங்கவே அவரது ஆதரவாளர்கள்தான் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வைரல் ஆனது.
Tags:
In Rajasthan 5 people gang famous Dada 2 people shot dead ராஜஸ்தானில் 5 பேர் கும்பல் பிரபல தாதா 2 பேர் சுட்டு கொலைமேலும் செய்திகள்
தூக்கு தண்டனை 165 ஆக அதிகரிப்பு: கடந்த 6 ஆண்டில் 2022ல் அதிகம்.! மூன்றில் ஒரு பங்கு பாலியல் குற்றங்கள்
மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒடிசா அமைச்சரை போலீஸ் எஸ்ஐ சுட்டுக் கொன்றது ஏன்? மர்மங்கள் நீடிப்பதால் சிஐடி விசாரணைக்கு உத்தரவு
பிபிசி ஆவணப்பட தடை மனு குறித்து: சட்ட மந்திரி கருத்து
லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்
சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!