சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு 18 நாளில் 10 லட்சம் பேர் தரிசனம்
2022-12-04@ 01:37:18

திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்த 16ம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணிக்குள் மட்டுமே 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்று முதல் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி முதல் ஞாயிறு வரை கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தினமும் சராசரியாக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். விடுமுறை நாட்களில் 80 ஆயிரம் முதல் 95 ஆயிரம் வரை பக்தர்கள் சபரிமலை வருகின்றனர்.
கடந்த 1ம் தேதி 63,460 பேரும், நேற்று முன்தினம் 73,297 பேரும் தரிசனம் செய்தனர். நேற்று 71,515 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதில் பெரும்பாலான பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 16ம் தேதி மாலை முதல் நேற்று காலை வரை சபரிமலையில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை தொடர்ந்து கடந்த இரு வருடங்களை விட இவ்வருடம் சபரிமலை கோயில் வருமானம் பல மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Sabarimala Pilgrimage Increase 10 Lakh Darshan in 18 Days சபரிமலை பக்தர்கள் வருகை அதிகரிப்பு 18 நாளில் 10 லட்சம் பேர் தரிசனம்மேலும் செய்திகள்
ராமர் சிலை செய்ய நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்த பாறை: சிறப்பு பூஜை செய்து வழிபாடு
நாடாளுமன்ற துளிகள்...
நாகாலாந்தில் காரில் ரூ.1 கோடி வைத்திருந்த பெண் கைது
தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: ரூ.22.76 கோடி செலவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!