சில்லி பாய்ன்ட்...
2022-12-04@ 01:32:55

* வங்கதேச அணியுடனான ஒருநாள் தொடரில் இருந்து வேகப் பந்துவீச்சாளர் ஷமி காயம் காரணமாக விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக இந்திய அணியில் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.
* பிரேசில் அணி வீரர்கள் கேப்ரியல் ஜீசஸ், அலெக்ஸ் டெல்லஸ் இருவரும் காயம் காரணமாக நடப்பு உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
* இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் லக்ஷியான் சென் தனது வயதை குறைத்து காட்டி மோசடி செய்ததாக எழுந்த சர்ச்சையில் லக்ஷியா, அவரது குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர் விமல் குமார் ஆகியோர் மீது பெங்களூரு போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
* பெர்த் டெஸ்டில் 498 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடும் வெஸ்ட் இண்டீஸ், 4ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்துள்ளது. ஆஸி. 598/4 மற்றும் 182/2 டிக்ளேர்; வெ. இண்டீஸ் 283 & 192/3.
* கோப்பை அறிமுகம்
இந்தியா - வங்கதேசம் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. இத்தொடருக்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி மிர்பூரில் நேற்று நடந்தது. இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா, வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் இருவரும் கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர். முதல் போட்டி இன்று நடக்கிறது.
மேலும் செய்திகள்
முதல் ஒரு நாள் போட்டி இங்கிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா: ஜேசன்ராய் சதம் வீண்
ஆடுகளம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது; கூடுதலாக 25 ரன் கொடுத்தது தான் தோல்விக்கு காரணம்: ஹர்திக் பாண்டியா பேட்டி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சவுராஷ்டிராவை வீழ்த்தியது தமிழ் நாடு: அஜித் ராம் அசத்தல் பந்துவீச்சு
கான்வே, டேரில் மிட்செல் அரை சதம் நியூசிலாந்து ரன் குவிப்பு
சில்லி பாயின்ட்...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2வது இடத்துடன் விடைபெற்றார் சானியா
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!