ரயிலில் கேட்பாரற்று கிடந்த 32 பவுன் நகை: மீட்டு ஒப்படைத்த பெண் போலீஸ்
2022-12-04@ 01:19:37

விழுப்புரம்: சென்னையில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றுமுன் தினம் இரவு விழுப்புரத்துக்கு வந்தது. அப்போது ரயிலின் முன்பதிவு பெட்டியான எஸ்-9 கோச்சில் ஒரு டிராவல்ஸ் பை கேட்பாரற்ற நிலையில் கிடந்தது. அந்த சமயத்தில் விழுப்புரத்தில் இருந்த ரயில்வே பெண் போலீஸ் சுதா என்பவர், கேட்பாரற்ற நிலையில் பையை பார்த்து இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டார். அதற்கு அவர், சென்னையில் இருந்து ரயில் புறப்படும்போதே இந்த பை இதே இருக்கையில் இருப்பதாகவும், யாரும் உரிமை கொண்டாடவில்லை என்றார். இதையடுத்து அந்த இருக்கையை முன்பதிவு செய்தவரின் விவரம் குறித்து உரிய விசாரணை நடத்தி அந்த பை, சென்னை மாத்தூரை சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி சுசித்ராவுக்கு (30) சொந்தமானது என்பதும், அந்த பையினுள் 32 பவுன் நகை இருந்ததும் தெரியவந்தது. உரிய விசாரணைக்கு பின்பு சுசித்ராவிடம் பையை ஒப்படைத்தனர். பெண் போலீஸ் சுதாவின் நேர்மையை அனைவரும் பாராட்டினர்.
Tags:
Rail 32 pounds of jewelry: recovered and handed over to policewoman ரயில் 32 பவுன் நகை மீட்டு பெண் போலீஸ்மேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தைப்பூச திருவிழா பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
சித்த மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்
கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!