இந்துக்கள் நடத்திய ஆலயத் திருவிழா: சப்பரத்தை சுமந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள்
2022-12-04@ 00:48:07

திசையன்விளை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சங்கனாங்குளம் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் கடைசி வாரத்தில் திருத்தல திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா நவ.23ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. டிச.1ம் தேதி 9ம் திருவிழாவையொட்டி சிறப்பு மாலை ஆராதனை, இரவு 10 மணிக்கு தேர் பவனி நடந்தது. இந்த கிராமத்தில் 2 கிறிஸ்தவ குடும்பங்கள் மட்டுமே உள்ளன. அதே நேரத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். எனினும் மக்களிடையே எந்தவித மத வேற்றுமையும் பாராமல் கொடியேற்றம் முதல் நிறைவு நாள் வரை ஒலி ஒளி, பந்தல், தேர் பவனி, டிரம் செட் ஆகிய ஏற்பாடுகளை மக்களே செய்தனர். இவை தவிர, வெளியூரில் இருந்து வரும் இறைமக்களை அன்புடன் வரவேற்று உபசரிப்பது, தங்குவதற்கு இடம் வழங்குவது, அசன விருந்து என அனைத்து செலவுகளையும் இவ்வூரில் வசிக்கும் இந்துக்களே வரிப்பணம் பிரித்து முன்னின்று புனித சவேரியாரின் திருவிழாவை மத நல்லிணக்க விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். இரண்டு கிறிஸ்தவ குடும்பங்கள் வாழும் சங்கனாங்குளம் கிராமத்தில், இந்துக்களே முன்னின்று நடத்தும் புனித சவேரியார் மத நல்லிணக்க திருவிழா, மத ஒற்றுமைக்கும் மனிதநேயத்திற்கும் முன் உதாரணமாக திகழ்வதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர்.
Tags:
Hindus temple festival carrying sabbath Ayyappa devotees இந்துக்கள் ஆலயத் திருவிழா சப்பரத்தை சுமந்து ஐயப்ப பக்தர்கள்மேலும் செய்திகள்
மண் காப்போம் இயக்கத்திற்காக பிரான்ஸ் முதல் கோவை வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: 50 வயதில் 7,000 கி.மீ சைக்கிள் ஓட்டிய சாதனை பெண்மணி
புதுகை, திருச்சியில் ஜல்லிக்கட்டு; 1,200 காளைகள் ஆக்ரோஷம்: அடக்கப் பாய்ந்த 600 வீரர்கள்
அணைக்கரை, கொள்ளிடம் ஆற்றில் ரூ.100 கோடி உயர்மட்ட பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும்: விவசாயிகள் பொதுமக்கள் வலியுறுத்தல்
விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் கோரி: சேலத்து இளைஞருக்கு குவியும் பாராட்டு
கோடியக்கரை, முத்துப்பேட்டை பகுதி சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்
அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி அகல பாதையில் விரைவில் ரயில் இயக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!