திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரதம் பவனி: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
2022-12-04@ 00:44:02

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் ‘மகாரதம்’ மாட வீதியில் பவனி வந்தது. நள்ளிரவு வரை வலம் வந்த பஞ்ச ரதங்களை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 7ம் நாளான நேற்று, தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் நேற்று அதிகாலை அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.
அப்போது, சங்கொலி, மேளதாளம் முழங்க தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மாட வீதியில் அலங்கரித்து நிலை நிறுத்தியிருந்த ஐந்து தேர்களில், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறப்பு பூஜைகளுடன் விநாயகர் தேர் புறப்பாடு காலை 6.40 மணிக்கு நடந்தது. அதனை தொடர்ந்து சுப்பிரமணியர் தேர் புறப்பாடு நடந்தது. அதில், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் அலங்கார ரூபத்தில் அருள்பாலித்தார். சுப்பிரமணியர் தேர் இந்தாண்டு ரூ.30 லட்சத்தில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ‘மகா ரதம்’ மாலை 3.35 மணிக்கு பவனி தொடங்கியது. அப்போது, அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என பக்தி பரவசத்துடன் விண்ணதிர முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேரை இழுத்தனர். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன் உள்ளிட்டோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தியபடி, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரின் மகாரதம் பவனி வந்தது.
அப்போது, மேளதாளம் முழங்க, மங்கள இசை ஒலிக்க, தூப தீபாராதனையுடன் மகா ரதத்தின் மீது மலர்களை தூவி பக்தர்கள் வணங்கினர். இரவு 11 மணியளவில் நிலையை அடைந்தது. அதைத்தொடர்ந்து, அம்மன் தேர் பவனி புறப்பாடு நடந்தது. பெண்கள் மட்டுமே அம்மன் தேர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். நிறைவாக, சண்டிகேஸ்வரர் தேர் மாட வீதியில் பவனி வந்தது. தேரோட்டத்தை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டிருந்தனர். அதனால், காணும் திசையெங்கும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
* கரும்புத் தொட்டில் நேர்த்திக்கடன்
தீபத்திருவிழாவின் 7ம் நாளான நேற்று நடந்த தேரோட்டத்தில், நூற்றுக்கணக்கான தம்பதியர், தங்கள் குழந்தைகளை கரும்புத் தொட்டிலில் சுமந்து, கோயில் 3ம் பிரகாரம் மற்றும் மாட வீதியில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், தொட்டிலாக பயன்படுத்திய கரும்பை, அண்ணாமலையார் கோயிலில் காணிக்கையாக வழங்கினர்.
Tags:
Tiruvannamalai Karthikai Deepatri Vizah Kolakalam Flood of Devotees Maha Ratham Bhavani திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரதம் பவனிமேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தைப்பூச திருவிழா பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
சித்த மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்
கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!