டைரிகள் விலை 30 சதவீதம் உயர்ந்தது: ‘‘வாசனை டைரி’’ புதிதாக அறிமுகம்
2022-12-04@ 00:43:08

நெல்லை: இந்தாண்டு டைரி விலைகள், 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. புதிய அறிமுகமாக ‘‘வாசனை டைரி’’ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 2023ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு டைரிகள், காலாண்டர் விற்பனைக்கு குவிக்கப்பட்டு வருகிறது. உறவினர்கள், நண்பர்களுக்கு டைரி கொடுத்து வாழ்த்துக் கூறி மகிழ்வார்கள். மேலும் டைரி எழுதும் பழக்கம் உள்ளவர்களும், புதுவரவு டைரிகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவர். இவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் வித்தியாசமான டைரிகளை தயாரித்து அறிமுகப்படுத்துகின்றனர். கடந்த ஆண்டுகளில் மினி பேக் வகையிலான டைரியின் உள்பகுதியில் செல்போன் வைத்துக் கொள்ளும் வசதி, பேனா ஸ்டாண்டு போன்றவை அறிமுகமாகி வரவேற்பை பெற்றன. இந்தாண்டு புதிய அறிமுகமாக டைரியின் பக்கங்களை புரட்டினால் நறுமணம் கமழும் டைரி அறிமுகமாகி உள்ளது. வழக்கமான கூடுதல் வசதியுடைய டைரிகளும் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் டைரிகளின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ரூ.130 முதல் ரூ.150 வரையிலான விலையில் விற்கப்பட்ட டைரிகள் ரூ.200ஐ கடந்துள்ளது. மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பு காரணமாகவிலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:
Prices of diaries 30 per cent higher 'smell diary' டைரிகள் விலை 30 சதவீதம் உயர்ந்தது ‘‘வாசனை டைரி’’மேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தைப்பூச திருவிழா பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
சித்த மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்
கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!