தமிழ் சங்கமம் வைத்து பாஜ அரசியல் கே.எஸ்.அழகிரி புகார்
2022-12-04@ 00:37:06

சென்னை: தமிழகம் முழுவதும் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் அடையாளமாக கொடியேற்றும் நிகழ்ச்சி தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை கொடுங்கையூர், கொளத்தூர் உள்ளிட்ட 10 இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பின் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அளித்த பேட்டி: தமிழ் வளர்ச்சிக்கு பாஜ முக்கியத்துவம் தருவது போல் படம் காட்டுகிறது. ஆனால் அமித்ஷாவின் கல்விக் கொள்கையில் முக்கிய தேர்வுகளை இந்தியில் தான் எழுத வேண்டும் என்று இருக்கிறது. காசியில் அவர்கள் நடத்துவதாக கூறும் தமிழ் சங்கமத்தில் உண்மையான தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டதாக தெரியவில்லை. பாஜவினர் அரசியல் செய்வதற்காக இதனை கையில் எடுத்துள்ளார்கள். தமிழ்நாட்டு முதல்வரை அழைத்து இருக்க வேண்டும். தமிழ் அறிஞர்களை அழைத்து இருக்க வேண்டும். இவர்களை எல்லாம் தவிர்த்துவிட்டு நிகழ்ச்சி நடத்துகின்றனர். இது பாஜவின் மறைமுக செயல் திட்டம் என்றார்.
Tags:
Tamil Sangamam BJP politics KS Alagiri complaint தமிழ் சங்கமம் பாஜ அரசியல் கே.எஸ்.அழகிரி புகார்மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
அதிமுக வேட்பாளரை நாளை அறிவிக்க திட்டம்?.. 7 மணி நேரத்துக்கு மேலாக ஆதரவாளர்களுடன் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு..!
ஆல் இந்தியா லீடர் ஆகிவிட்டார் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி அணிக்கு செக் வைக்க அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியை தூண்டிவிட்ட பாஜக..!
ஈரோடு கிழக்கு தொகுதி திராவிட மாடல் ஆட்சியை எடை போடும் தேர்தல்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக 106 பேர் கொண்ட தேர்தல் பணி குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!