பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா தமிழகம் முழுவதும் 100 இடங்களில் பொதுக்கூட்டம்: வடசென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்
2022-12-04@ 00:26:42

சென்னை: பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வருகிற 16ம் தேதி 100 இடங்களில் திமுக பொதுக்கூட்டம் நடக்கிறது. வடசென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இதுகுறித்து, திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகம் முழுவதும் வருகிற 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டங்கள் நடக்கிறது. அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையிலும்-நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புற நடத்திட வேண்டும். 18ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வடசென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
16ம் தேதி காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி உரையாற்றுகின்றனர். கோவை மாநகர்- திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, ஈரோடு சத்தியவதி. சேலம் மாநகர்-முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, பி.ஆர்.சுந்தரம், ஆரணி மாலா. கம்பம்-துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, தீக்கனல் தியாகு. செங்கல்பட்டு-துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, கவிஞர் நன்மாறன். திருத்தணி-துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி, திருப்பத்தூர் ரஜினி. அரக்கோணம்-துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி, சேப்பாக்கம் பிரபாகரன்.
திண்டிவனம்-துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி, பவித்திரம் கண்ணன். கரூர்-ஆர்.எஸ்.பாரதி, போடி காமராஜ். மேட்டுப்பாளையம்-திருச்சி சிவா எம்.பி, மதுரை சாதுராஜன். ஆவடி-இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, தஞ்சை கூத்தரசன் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். ராணிப்பேட்டை பொதுக்கூட்டத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர். மதுராந்தகம்-எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்பி, சிவமுத்து வளவன். தாம்பரம்-பொன்.முத்துராமலிங்கம், துறையூர் துரைப்பாண்டி. பல்லாவரம்-நாஞ்சில் சம்பத், குடியாத்தம் கோடீஸ்வரன். கும்மிடிப்பூண்டி-வாகை சந்திரசேகர், வேலூர் ரமேஷ் ஆகியோர் உரையாற்றுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல மற்ற இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுபவர்கள் பெயர், விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Tags:
Prof. Anbazagan Centenary Celebration Tamil Nadu 100 Places Public Meeting North Chennai Chief Minister M.K.Stalin பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா தமிழகம் 100 இடங்களில் பொதுக்கூட்டம் வடசென்னை முதல்வர் மு.க.ஸ்டாலின்மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
அதிமுக வேட்பாளரை நாளை அறிவிக்க திட்டம்?.. 7 மணி நேரத்துக்கு மேலாக ஆதரவாளர்களுடன் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு..!
ஆல் இந்தியா லீடர் ஆகிவிட்டார் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி அணிக்கு செக் வைக்க அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியை தூண்டிவிட்ட பாஜக..!
ஈரோடு கிழக்கு தொகுதி திராவிட மாடல் ஆட்சியை எடை போடும் தேர்தல்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக 106 பேர் கொண்ட தேர்தல் பணி குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!