ஆன்லைன் ரம்மியால் ரூ.7 லட்சம் கடன் தனியார் நிறுவன அதிகாரி தற்கொலை
2022-12-03@ 15:30:40

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அடுத்த சின்ன முதலியார்சாவடி எம்ஜிஆர் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் முத்துசாமி (33).இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று அதிகாலை வழக்கம்போல் சின்ன முதலியார்சாவடி ஈசிஆர் சாலையில் நடைபயிற்சி சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மகேஸ்வரி உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் கோட்டகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், முத்துசாமி ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி தினமும் விளையாடி வந்ததும் அதில் பல்வேறு நபர்களிடமிருந்து ரம்மி விளையாடுவதற்காக ரூ.7 லட்சம் வரை கடன் பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான முத்துசாமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை நடுக்குப்பம் மீனவர் பகுதியில் கடற்கரையில் ஆண் சடலம் கரை ஒதுங்கி இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கோட்டகுப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி கனக செட்டிகுளம் தனியார் மருத்துவமனையில் பிரோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில், கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கிய நபர் முத்துசாமி என்பது தெரிய வந்ததுள்ளது. கடன் பிரச்னையால் இவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தைப்பூச திருவிழா பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
சித்த மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்
கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!