மலேசியாவில் இருந்து 44,000 மெட்ரிக் டன் யூரியா உரம் காரைக்கால் துறைமுகம் வந்தது: நாகை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
2022-12-03@ 12:54:57

காரைக்கால்: மலேசியாவில் இருந்து 44,000 மெட்ரிக் டன் யூரியா உரம் காரைக்கால் துறைமுகம் வந்தது. காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டுள்ளார். டிசம்பர் மாதத்துக்கு 27,140 மெட்ரி டன் யூரியா தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப ரயில் மூலமாகவும் சாலை மார்க்கமாவும் யூரியா உரம் அனுப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்திற்கு தேவையான 44,000 மெட்ரிக் டன் யூரியா உரம் காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு வந்ததையடுத்து உரத்தை தேவைக்கேற்ப பிற மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார்.
தமிழகத்தில் யூரியா உரம் தட்டுப்பாடு இல்லை என அரசு சார்பாகவும், வேளாண்துறை சார்பாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதலாக உரத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், கையிருப்பு வைத்து கொள்வதற்காகவும் உரம் காரைக்கால் துறைமுகம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் மாதத்துக்கு 27,140 மெட்ரி டன் யூரியா ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் 1,573 மெட்ரிக் டன் யூரியா உரமும், 110 மெட்ரி டன் டிஏபி, 353 மெட்ரி டன் பொட்டாஷ், 726 மெட்ரி டன் காம்ப்ளக்ஸ் உரம், இவை அனைத்தும் வேளாண் கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களிலும் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உரம் காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு வந்ததையடுத்து உரத்தை 45 கிலோ மூட்டைகளாக பேக்கிங் செய்யப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் வேளாண் துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
2.28 லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கியது; டெல்டாவில் மழை சேதம் அமைச்சர்கள் குழு ஆய்வு: முதல்வரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு
பிழைப்புக்காக இல்லாமல் எப்போதும் சிவனையே மனதில் வைத்து வாழும் தீவிர பக்தர்: மெய்ப்பொருள் நாயனாரின் மெய்சிலிர்க்கும் பக்தி
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது: சுமார் 2மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம்
படகு போட்டிக்கு அனுமதி மறுப்பு; தடையை மீறி கோவளம் வந்த படகுகள்: குமரியில் போலீஸ் குவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே தைப்பூச திருவிழா கோலாகலம்: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
புதுகையில் விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!