திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 7-ம் நாளில் தேரோட்டம் கோலாகலம்: விநாயகர் தேரை அரோகரா முழக்கத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்..
2022-12-03@ 12:36:28

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 7-ம் நாள் விழா விநாயகர் தேரோட்டத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் தேரோட்டத்தில் அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். கடந்த நவம்பர் 27-ம் தேதி அண்ணாமலையார் சன்னதி முன்பு உள்ள 67 அடி உயர தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா தொடங்கியது.
கார்த்திகை தீபத்திருவிழாவின் 7-ம் நாளான இன்று தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. 2-ம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எழுந்தருளிய விநாயகர் முருகர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோயில் வளாகத்தை வளம் வந்தன. 16 கால் மண்டபம் அருகே தனித்தனி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதையடுத்து காலை 7 மணியளவில் ராஜகோபுரத்தில் இருந்து தொடங்கிய விநாயகர் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா முழக்கத்துடன் வடம் பிடித்தனர்.
அண்ணாமலையாரை வேண்டி குழந்தை வரம் பெற்றவர்கள் கரும்பில் சேலையை கொண்டு தொட்டில் கட்டி அதில் தங்கள் குழந்தைகளை வைத்து மாட விதிகளை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விநாயகர் தேரையடுத்து, முருகர் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். இரு தேர்களும் நிலையை வந்தடைந்ததும் அண்ணாமலையார் தேர் எனப்படும் பெரிய தேர் இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒருபுறமும், பெண்கள் ஒருபுறமும் அணிவகுத்து வடம் பிடிப்பர். பெரிய தேர் நிலையை எட்டியதும் இரவில் நடைபெறும் அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுப்பார்கள்.
இதன் பின்னல் சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமியர் வடம் பிடிப்பார்கள். தேரோட்டத்தையொட்டி சுமார் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டு பின்னர் அர்த்த மண்டபத்தில் 5 தீபங்கள் காட்டப்படும். அதன் தொடர்ச்சியாக மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மாகதீபம் ஏற்றப்படும்.
மேலும் செய்திகள்
2.28 லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கியது; டெல்டாவில் மழை சேதம் அமைச்சர்கள் குழு ஆய்வு: முதல்வரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு
பிழைப்புக்காக இல்லாமல் எப்போதும் சிவனையே மனதில் வைத்து வாழும் தீவிர பக்தர்: மெய்ப்பொருள் நாயனாரின் மெய்சிலிர்க்கும் பக்தி
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது: சுமார் 2மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம்
படகு போட்டிக்கு அனுமதி மறுப்பு; தடையை மீறி கோவளம் வந்த படகுகள்: குமரியில் போலீஸ் குவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே தைப்பூச திருவிழா கோலாகலம்: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
புதுகையில் விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!