காங்கிரசில் இருந்து வந்தவர்களுக்கு பாஜவில் பொறுப்பு
2022-12-03@ 00:45:48

புதுடெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் சுனில் ஜாகர் ஆகியோரை தேசிய செயற்குழு உறுப்பினர்களாக பாஜ அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பாஜ தேசிய செயற்குழு உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இதே போல, உத்தரப்பிரதேச பாஜ மாநில தலைவர் சுனில் ஜாகரையும் தேசிய செயற்குழு உறுப்பினராக பாஜ நியமித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் தலைமை குறித்து அதிருப்தி தெரிவித்து அக்கட்சியில் இருந்து வெளியேறி பாஜவில் சேர்ந்த ஜெய்வீர் ஷெர்கில், பாஜவின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரகாண்ட், சட்டீஸ்கர் மாநில பாஜ தலைவர்களான மதன் கவுசிக், விஷ்ணு தியோ சாய் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த ராணா குர்மித் சிங் சோதி, மனோரஞ்சன் கலியா, அமன்ஜோத் கவுர் ஆகியோர் தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தை 14 ஆண்டுகளாக ரயில்வே புறக்கணிப்பு: ராமதாஸ் சாடல்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்க நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திண்ணை பிரசாரம்
அதிமுக அமைப்பு செயலாளராக செந்தில் முருகன் நியமனம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் திடீர் திருப்பம்; ஓபிஎஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்: பாஜ மிரட்டலுக்கு பணிந்து எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 பேர் மீது வழக்கு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!