விஜய் ஹசாரே டிராபி ஜாக்சன் அதிரடியில் சவுராஷ்டிரா சாம்பியன்: ‘மகா’ கேப்டன் ருதுராஜ் சதம் வீண்
2022-12-03@ 00:45:26

அகமதாபாத்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடரின் பைனலில், மகாராஷ்டிரா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சவுராஷ்டிரா அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சவுராஷ்டிரா முதலில் பந்துவீச... மகாராஷ்டிரா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன் குவித்தது. கேப்டனும் தொடக்க வீரருமான ருதுராஜ் கெயிக்வாட் 108 ரன் (131 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். அஸிம் காஸி 37, நவுஷத் ஷேக் 31*, சத்யஜீத் 27 ரன் எடுத்தனர். சவுராஷ்டிரா பந்துவீச்சில் சிராக் ஜானி 3, பிரேரக், பார்த் பட், உனத்கட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா அணி 46.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன் எடுத்து வென்றது.
தொடக்க வீரர்கள் ஹர்விக் தேசாய் - ஷெல்டன் ஜாக்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 125 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. தேசாய் 50 ரன் எடுத்து வெளியேறினார். அபாரமாக விளையாடி சதம் அடித்த ஜாக்சன் 133 ரன் (136 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்), சிராக் ஜானி 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மகாராஷ்டிரா பந்துவீச்சில் முகேஷ், விக்கி தலா 2, சத்யஜீத் 1 விக்கெட் எடுத்தனர். ஷெல்டன் ஜாக்சன் ஆட்ட நாயகன் விருதும், ருதுராஜ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். நடப்பு விஜய் ஹசாரே தொடரில் தொடர்ந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் காலிறுதியில் 220*, அரையிறுதியில் 168, பைனலில் 108 ரன் விளாசினார். 10 இன்னிங்சில் அவர் 8 சதம் விளாசி அசத்தியதுடன், ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் விளாசி உலக சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.
Tags:
Vijay Hazare Trophy Jackson Saurashtra Champion 'Maha' Captain Ruduraj Sadam Veen விஜய் ஹசாரே டிராபி ஜாக்சன் சவுராஷ்டிரா சாம்பியன் ‘மகா’ கேப்டன் ருதுராஜ் சதம் வீண்மேலும் செய்திகள்
சில்லி பாயின்ட்...
ரஞ்சி கோப்பை காலிறுதி 93 ரன்னில் சுருண்டது ஆந்திரா: ம.பி.க்கு வெற்றி வாய்ப்பு
3வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி.! 6 விக்கெட் கைப்பற்றி அசத்திய ஆர்ச்சர்
மகளிர் டி 20 இறுதி போட்டி; இந்தியா தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
பறந்து வந்த பந்தை பாய்ந்து பிடித்த சூர்யகுமார்
சுப்மன் கில் தில்லான ஆட்டத்தால் நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா; அனைத்து வீரர்களும் மிக சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!