கால்பந்து வீரரான பிரபல நடிகர் மரணம்: அமெரிக்காவில் சோகம்
2022-12-02@ 17:56:16

புளோரிடா: அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் வசித்து வந்த பிராட் வில்லியம் ஹென்கே (56), தேசிய கால்பந்து வீரராக இருந்து ஹாலிவுட் நடிகராக பிரபலமடைந்தார். ‘ஆரஞ்சு இஸ் தி நியூ பிளாக்’ என்ற திரைப்படத்தின் புகழ்பெற்ற இவர், நேற்று முன்தினம் திடீர் உடல்நலக் குறைவால் இறந்தார். அவரது உதவியாளர் ஷெரீ கோஹென் வெளியிட்ட அறிக்கையில், ‘மிகவும் திறமையான நடிகரான பிராட் மரணம் அடைந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.
நெப்ராஸ்காவில் பிறந்த பிராட் வில்லியம் ஹென்கே, டென்வர் ப்ரோன்கோஸிற்காக கால்பந்து போட்டிகளில் விளையாடினார். அவரது உடலில் ஏற்பட்ட காயங்களால் 1994ல் கால்பந்து போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்தார். அதன்பின் கால்பந்து விளையாட்டை விட்டுவிட்டு, ஒரு நடிகராக பிரபலமானர். ‘லாஸ்ட்’, ‘டெக்ஸ்டர்’, ‘ஈஆர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.57 கோடியாக அதிகரிப்பு
இந்தியாவுடனான உறவு நீடிக்கும் பிபிசியின் சுதந்திரத்தை அரசு பாதுகாக்கும்: இங்கிலாந்து அறிவிப்பு
அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சவாளி நிக்கி ஹாலே போட்டி?
நிலக்கரிக்கு அதிக கட்டணம் அதானி ஒப்பந்தம் மறுபரிசீலனை: வங்கதேசம் அறிவிப்பு
அதானி நிறுவனத்தின் பதவியை உதறினார் மாஜி பிரதமரின் தம்பி
சீன எல்லையை கண்காணிக்க அமெரிக்காவிடம் நவீன டிரோன்கள் வாங்கும் இந்தியா: ரூ.24,000 கோடிக்கு விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!