பஞ்சாபி பாடகர் கொலை வழக்கு; மூளையாக செயல்பட்ட தாதா கலிபோர்னியாவில் கைது: இன்டர்போல் உதவியுடன் அதிரடி
2022-12-02@ 17:44:08

அமிர்தசரஸ்: பாடகர் சித்து முசேவாலா கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியான சதீந்தர்ஜீத் சிங்கை கலிபோர்னியாவில் இன்டர்போல் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். பஞ்சாபி பாடகர் சித்து முசேவாலா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்தவனும், பாடகரின் கொலைக்கு மூளையாக செயல்பட்டவனுமான பிரபல தாதா கோல்டி ப்ரார் என்ற சதீந்தர்ஜீத் சிங்கை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து பஞ்சாப் உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘பாடகர் சித்து முசேவாலா கொலை சம்பவத்தின் பின்னணியில் சதீந்தர்ஜீத் சிங், பஞ்சாப் சிறையில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளிட்டோர் உள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு தப்பியோடிய சதீந்தர்ஜீத் மீது 16க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் மாவட்ட நீதிமன்றம், சதீந்தர்ஜீத்துக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்தது.
மேலும், சதீந்தர்ஜீத்துக்கு எதிராக இன்டர்போல் தரப்பில், ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கலிபோர்னியாவில் இன்டர்போல் உதவியுடன் சதீந்தர்ஜீத் சிங் கைது செய்யப்பட்டார்’ என்று தெரிவித்தன. ஆனால், ஒன்றிய உள்துறை அமைச்சகமோ அல்லது மற்ற புலனாய்வு அமைப்புகளோ சதீந்தர்ஜீத் சிங் கைது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
மோடி குறித்த ஆவணப்பட விவகாரம்: ‘பிபிசி’ தகவல் யுத்தத்தை நடத்துகிறது! ரஷ்ய வெளியுறவு அதிகாரி கண்டனம்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல்
வனப்பகுதியில் பதுங்கியிருந்த 4 லஷ்கர் தீவிரவாதிகள் கைது
அபுதாபி டூ மும்பை வந்த விமானத்தில் இத்தாலி பெண் பயணி போதையில் ரகளை: ஊழியர்கள் மீது எச்சில் துப்பியதால் பரபரப்பு
அடுக்குமாடி சுவர் இடிந்து விழும் முன் எலி உருட்டியதால் 5 பேரின் உயிர் தப்பியது: ராஜஸ்தானில் விநோதம்
காவல் நிலையம் முன் அமர்ந்து கொண்டு ‘ஹூக்கா’ புகைத்து ‘ரீல்’ வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!