சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுண்ணாம்பு கல் சுரங்கத்தில் மண் சரிவு: 7 தொழிலாளர்கள் பலி
2022-12-02@ 17:23:14

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பஸ்டர் மாவட்டத்தில் உள்ள சுரங்கத்தில் மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் தொழிலாளர்கள் கற்களை வெட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது மண் சரிந்து விபத்து ஏற்பட்டது.
சத்தீஸ்கரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் மல்கான் கிராமத்தில் உள்ள சுண்ணாம்பு கல் சுரங்கத்தில் கிராம மக்கள் வேலை செய்துவருகின்றனர். சற்று நேரத்துக்கு முன்னதாக அந்த சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த மண்ச்சரிவில் முதற்கட்டமாக 12 பேர் சிக்கிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 5 பேரை மீட்க்கும் முயற்சியில் காவல்துறை, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் எஞ்சியவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மீட்புக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பலர் இந்த மண் சரிவில் சிக்கியிருக்க வாய்ப்பிருப்பதாக கிராமமக்கள் கூறுகின்றனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த மீட்பு பணியானது நடைபெற்றுவருகிறது.
மேலும் செய்திகள்
மோடி குறித்த ஆவணப்பட விவகாரம்: ‘பிபிசி’ தகவல் யுத்தத்தை நடத்துகிறது! ரஷ்ய வெளியுறவு அதிகாரி கண்டனம்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல்
வனப்பகுதியில் பதுங்கியிருந்த 4 லஷ்கர் தீவிரவாதிகள் கைது
அபுதாபி டூ மும்பை வந்த விமானத்தில் இத்தாலி பெண் பயணி போதையில் ரகளை: ஊழியர்கள் மீது எச்சில் துப்பியதால் பரபரப்பு
அடுக்குமாடி சுவர் இடிந்து விழும் முன் எலி உருட்டியதால் 5 பேரின் உயிர் தப்பியது: ராஜஸ்தானில் விநோதம்
காவல் நிலையம் முன் அமர்ந்து கொண்டு ‘ஹூக்கா’ புகைத்து ‘ரீல்’ வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!