ஜனநாயகம் குறித்து இந்தியாவுக்கு யாரும் பாடம் எடுக்க அவசியமில்லை: ஐ.நாவில் இந்தியா பதிலடி..!
2022-12-02@ 17:19:36

லண்டன்: ஜனநாயகம் குறித்து இந்தியாவுக்கு யாரும் பாடம் எடுக்க அவசியமில்லை என ஐ.நாவில் இந்தியா தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் டிசம்பர் மாதத்திற்கான தலைமைப் பொறுப்பு நேற்று இந்தியா வசம் வந்தது. அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ருச்சிரா காம்போஜிடம் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து பதிலளித்த இந்தயாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ்; உலகிலேயே இந்தியா தான் முதலில் நாகரீமடைந்த நாடு. இந்தியா பழம்பெருமை வாய்ந்த தேசம். இந்திய ஜனநாயகத்தின் வேர்கள் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது.
நாங்கள் எப்போதுமே ஜனநாயகமாகத் தான் இருந்துள்ளோம். அண்மைக் காலத்தை எடுத்துக் கொண்டாலும் ஜனநாயகத்தின் 4 தூண்களும் வலுவாக இருக்கின்றன. இந்தியாவில் சமூக ஊடகங்கள் கூட சுதந்திரமாக தான் இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலும் முறையாக நடந்து வருகிறது. எங்கள் நாட்டில் யார் வேண்டுமானாலும் அவர்கள் மனதில் இருப்பதை சொல்லும் உரிமை இருக்கின்றது. எனவே ஜனநாயகம் குறித்து எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க அவசியம் ஏற்படவில்லை என கூறினார்.
மேலும் செய்திகள்
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.57 கோடியாக அதிகரிப்பு
இந்தியாவுடனான உறவு நீடிக்கும் பிபிசியின் சுதந்திரத்தை அரசு பாதுகாக்கும்: இங்கிலாந்து அறிவிப்பு
அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சவாளி நிக்கி ஹாலே போட்டி?
நிலக்கரிக்கு அதிக கட்டணம் அதானி ஒப்பந்தம் மறுபரிசீலனை: வங்கதேசம் அறிவிப்பு
அதானி நிறுவனத்தின் பதவியை உதறினார் மாஜி பிரதமரின் தம்பி
சீன எல்லையை கண்காணிக்க அமெரிக்காவிடம் நவீன டிரோன்கள் வாங்கும் இந்தியா: ரூ.24,000 கோடிக்கு விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!