அடுத்தடுத்து மாடுகள் மீது மோதி 5வது முறையாக விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரயில்
2022-12-02@ 16:03:07

காந்திநகர்: அடுத்தடுத்து மாடுகள் மீது வந்தே பாரத் ரயில் மோதியதில், தற்போது 5வது முறையாக குஜராத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் காந்திநகரில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயில், உத்வாடா மற்றும் வாபி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் குறுக்கே தண்டவாளத்தில் மாடு சென்றதால், வந்தே பாரத் ரயில் விபத்தில் சிக்கியது. இதனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் முன்பகுதி சேதமடைந்தது. தொடர்ந்து ரயிலை லோகோ பைலட் நிறுத்தினர்.
அதன்பின் முகப்பு பகுதி ஓரளவு சரி செய்யப்பட்டு, சுமார் அரை மணி நேரத்திற்கு பின் மீண்டும் அந்த ரயில் இயக்கப்பட்டது. இதுகுறித்து மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறுகையில், ‘உத்வாடா மற்றும் வாபி இடையே லெவல் கிராசிங் கேட் அருகில் தண்டவாளத்தில் சென்ற மாடு, ரயிலின் முன்பகுதியில் மோதியது. சிறிது நேர நிறுத்தத்திற்குப் பிறகு மாலை 6.35 மணியளவில் மீண்டும் ரயில் புறப்பட்டு சென்றது’ என்றார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இதுவரை ஐந்தாவது முறையாக விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
மோடி குறித்த ஆவணப்பட விவகாரம்: ‘பிபிசி’ தகவல் யுத்தத்தை நடத்துகிறது! ரஷ்ய வெளியுறவு அதிகாரி கண்டனம்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல்
வனப்பகுதியில் பதுங்கியிருந்த 4 லஷ்கர் தீவிரவாதிகள் கைது
அபுதாபி டூ மும்பை வந்த விமானத்தில் இத்தாலி பெண் பயணி போதையில் ரகளை: ஊழியர்கள் மீது எச்சில் துப்பியதால் பரபரப்பு
அடுக்குமாடி சுவர் இடிந்து விழும் முன் எலி உருட்டியதால் 5 பேரின் உயிர் தப்பியது: ராஜஸ்தானில் விநோதம்
காவல் நிலையம் முன் அமர்ந்து கொண்டு ‘ஹூக்கா’ புகைத்து ‘ரீல்’ வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!