ஸ்கூட்டரில் சென்ற மாணவி சிறுத்தை பாய்ந்து படுகாயம்
2022-12-02@ 15:58:22

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஸ்ரீ மதுரை ஊராட்சி ஏச்சம் வயல் பகுதியில் வசிப்பவர் ராஜூ கூலித் தொழிலாளி. இவரது மகள் சுசீலா (18). கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார். மேலும், அங்குள்ள ஜவுளிக்கடையில் பகுதி நேர வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வேலை முடிந்து தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பினார். புத்தூர் வயல் பகுதிக்கு முன்பு உள்ள தனியார் மருத்துவமனை பகுதியில் சென்றபோது, சாலை ஓரத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று திடீரென ஸ்கூட்டர் மீது பாய்ந்தது.
இதில், நிலைத்தடுமாறிய சுசீலா, ஸ்கூட்டருடன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அப்போது, அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்ததால் சிறுத்தை அங்கிருந்து ஓடியது. இதையடுத்து ஆட்டோவில் வந்தவர்கள் சுசீலாவை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுசீலா சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் செய்திகள்
3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு போதைப்பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை: முதல்வருக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
கலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையாருக்கு பக்தர்கள் வெள்ளத்தில் ரதசப்தமி தீர்த்தவாரி
தேன் கொள்முதலுக்கான விலையை உயர்த்த வழக்கு: காதி வாரியம் பரிசீலிக்க உத்தரவு
நாஞ்சில் சம்பத்திடம் அமைச்சர் நலம் விசாரித்தார்
புதுவையில் 30, 31ம் தேதிகளில் ஜி20 மாநாட்டுக்காக 5 இடங்களில் 144 தடை
தர்மபுரி அருகே அட்டகாசம் யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!