கோவையில் அதிமுக உண்ணாவிரதம்: எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
2022-12-02@ 15:19:08

கோவை: கோவை மாவட்ட அதிமுக சார்பில், தார்ச்சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவானந்தாகாலனியில் இன்று உண்ணாவிரதம் நடந்தது. முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். இதில், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தார்ச்சாலை வசதி, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. கோவை மாவட்டம் அன்னூரில் தொழில்பூங்கா திட்டத்தை கைவிட்டு, விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.
விவசாயிகளிடம் இருந்து நிலங்களை எடுக்கக்கூடாது. கோவையில் குண்டும், குழியுமாக காட்சி தரும் சாலைகளை உடனடியாக சீர்படுத்த வேண்டும். சிமென்ட், செங்கல் போன்ற கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதை, கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். உண்ணாவிரத பந்தலுக்கு வெளியேயும் அதிமுக தொண்டர்கள் நின்றுகொண்டிருந்தனர். இது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்தது. அந்த வழியாக சென்ற ஒரு தனியார் ஆம்புலன்ஸ் இக்கூட்டத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
தமிழகத்தை 14 ஆண்டுகளாக ரயில்வே புறக்கணிப்பு: ராமதாஸ் சாடல்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்க நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திண்ணை பிரசாரம்
அதிமுக அமைப்பு செயலாளராக செந்தில் முருகன் நியமனம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் திடீர் திருப்பம்; ஓபிஎஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்: பாஜ மிரட்டலுக்கு பணிந்து எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 பேர் மீது வழக்கு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!