SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலி நில ஆவணங்களை காட்டியவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.20.52 கோடி இழப்பீட்டு தொகை திரும்ப வசூல்: தமிழக அரசு தகவல்

2022-12-02@ 15:13:18

சென்னை: போலி நில ஆவணங்களை காட்டியவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.20.52 கோடி இழப்பீட்டு தொகை திரும்ப வசூலிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிலம் கையகப்படுத்தலில் போலி நில ஆவணங்களை காட்டி மோசடி செய்யப்பட்டது. ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றபோது போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி நடைபெற்றது. இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராஜேந்திரன் என்பவர் கைகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இழப்பீட்டு தொகையை திரும்பப் பெறாவிட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என ஏற்கனவே நீதிபதி எச்சரித்திருந்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • stalin-corp-31

    மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • long-whale-newyork

    35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

  • pak-blast-30

    பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

  • china-spring-festival

    சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

  • orange-tree-wishes-27

    ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்