SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உறவினர்களுடன் கைதிகள் பேச சிறையில் டெலி இன்டர்காம் வசதி: ‘செக்’ சினிமா படம் போல அழகாக பேசலாம்

2022-12-02@ 12:20:53

சேலம்: சேலம் மத்திய சிறையில் கைதிகள் உறவினர்களுடன் பேசுவதற்கு டெலி இன்டர்காம் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கைதிகளும், உறவினர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களை அவர்களது உறவினர்கள் வாரத்திற்கு 5 நாட்கள் பார்த்து பேசலாம். விசாரணை கைதிகள் என்றால் வாரத்திற்கு 3 நாட்களும், தண்டனை கைதிகள் என்றால் வாரத்திற்கு 2 நாட்களும் பார்க்க அனுமதி உண்டு. கைதிகளை பார்க்க வேண்டுமானால் அவர்களின் உறவினர்கள் தானா? என்பதற்கான  ஆதார், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். ஒரு நபரை 3 பேர் பார்க்கலாம்.

இவ்வாறு மனு எழுதி கைதியை சந்திக்கும் அறையில் சென்ற பிறகுதான், ஏன் தான் பார்க்க வந்தோமோ? என்ற எண்ணம் தோன்றும். மகனையோ, கணவரையோ பார்த்து பேசினால் இருவருக்கும் மன அமைதி ஏற்படும் என்பதற்கு பதிலாக, பெரும் மன அழுத்தமே ஏற்படும். அந்த அளவுக்கு கைதிகளை பார்க்கும் இடம் இருக்கும். இரு தரப்பினருக்கும் இடையே 2மீட்டர் அகலத்தில் கம்பி வலை போடப்பட்டிருக்கும். ஒரே நேரத்தில் 15 கைதிகளை அந்த அறைக்கு அழைப்பார்கள். கைதிகளும், உறவினர்களும் என்ன பேசினார்கள் என்பது இருவருக்குமே தெரியாது. சத்தம் தான் அதிகமாக கேட்கும்.

இந்த நிலையை மாற்ற தமிழக அரசு  நடவடிக்கை எடுத்தது. அதன்படி டெலி இன்டர்காம் மூலம் மிகவும் எளிதாக பேசும் வசதியை ஏற்படுத்த உத்தரவிட்டது. ‘செக்’ என்ற தெலுங்கு சினிமாவில் சிறையில் தண்டனை கைதியான கதாநாயகன் நிதின்குமார்ரெட்டியும், அவருக்கு பயிற்சி கொடுத்த முதியவரும் டெலிஇன்டர் காம் மூலம் முகத்தை பார்த்துக்கொண்டே பேசுவார்கள். அதே வசதி தமிழக சிறைகளில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கைதிகள் உறவினர்களோடு மனதில் நினைத்தை தெளிவாக பேசி, மனநிறைவு பெறலாம்.

இந்த டெலிஇன்டர் காம் வசதி சென்னை, கோவை, மதுரை, வேலூர், சேலம் என அனைத்து மத்திய சிறைகளிலும் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மத்திய சிறையில் அமைக்கப்பட்ட 20 டெலி இன்டர்காமை, சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் நேற்று துவக்கி வைத்தார். அப்போது சிறைக்கு ஆய்வுக்கு சென்ற கலெக்டர் கார்மேகம், டெலி இன்டர்காம் வசதி செய்யப்பட்டுள்ளதை பாராட்டினார். அதே நேரத்தில் கலெக்டர், எதிர் பகுதியில் இருந்த கைதியிடம் டெலிஇன்டர்காம் மூலம் பேசி நலம் விசாரித்தார். கைதியின் குறைகளையும் கேட்டறிந்தார்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழக சிறைகளில் டெலி இன்டர்காம் வசதி செய்ய சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கைதிகளிடம்  தெளிவாக பேசமுடியும். அதே நேரத்தில் டெலிஇன்டர்காம் மூலம் பேசும் கைதிகள், யாருக்கும் தெரியாது என நினைத்து எதிராளிக்கு எதிராக சதி செய்வது தெரிய வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கைதிகளின் பின்பகுதியில் வார்டன்கள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்,’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nivaraaa1

    மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!

  • vadakoriya

    வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு

  • erode-senthilbalaji-8

    சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

  • athisayangal

    நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

  • perunad

    பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்