ரூ.1.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கி.ரா.மணிமண்டபத்தை காணொலியில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்: கோவில்பட்டி விழாவில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்கின்றனர்
2022-12-02@ 12:15:55

கோவில்பட்டி: கோவில்பட்டியில் ரூ.1.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கி.ரா. மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் இன்று திறந்து வைக்கிறார். விழாவில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்கின்றனர். கரிசல் இலக்கியத்தின் தந்தை, சாகித்திய அகாடமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் `கி.ரா’ என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நினைவாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள யூனியன் அலுவலக வளாகத்தில் தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று (2ம் தேதி) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைக்கிறார். கோவில்பட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி, யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், நகராட்சி கமிஷனர் ராஜாராம் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
கோவில்பட்டியில் விழா ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கி.ரா. மணிமண்டபத்தையும் பார்வையிட்டார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
கோவில்பட்டியில் கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் மணிமண்டபம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டு ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ளது. மணிமண்டப வளாகத்தில் கி.ரா. திருவுருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நாளை (இன்று) 2ம் தேதி திறந்து வைக்கிறார். அதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். மேலும் மணிமண்டபத்திற்கான பாதுகாப்பு குறித்த வசதிகள் அனைத்தும் செய்யப்படும். கி.ரா. பயன்படுத்திய பொருட்களை அவரது குடும்பத்தினர் வழங்கி உள்ளனர்.
கனிமொழி எம்பி, புதுச்சேரியில் இருந்து அத்தனை பொருட்களையும் வரவழைத்துள்ளார். அந்தப் பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. கி.ரா. எழுதிய அனைத்து புத்தகங்களும் நூலகத்தில் வைக்கப்படும். மற்றொரு அறையில் கி.ராவின் புத்தகங்கள் டிஜிட்டல் வடிவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்றதை போன்று கோவில்பட்டியிலும் புத்தக திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். ஆய்வின்போது கோட்டாட்சியர் மகாலட்சுமி, தாசில்தார் சுசீலா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:
கி.ரா.மணிமண்டபம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் கோவில்பட்டி விழா கனிமொழி எம்பி அமைச்சர் கீதாஜீவன்மேலும் செய்திகள்
உலகின் மிகப் பிரமாண்டமான மஹா சிவராத்திரி விழா: ஈஷாவில் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற உள்ளது
100 நாள் வேலைவாய்ப்பு திட்ட நிதி ஒதுக்கீட்டை குறைத்த ஒன்றிய அரசை கண்டித்து மார்ச் 7ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: முத்தரசன் அறிவிப்பு
அனுமதியின்றி அதிமுகவினர் கூட்டம்: ஈரோடு மண்டபத்துக்கு சீல்
புதுச்சேரி சாராயக்கடைக்கு செல்ல ஆற்றில் செம்மண் சாலை அமைப்பு: பள்ளம் தோண்டி தடுத்த போலீஸ்
மதுரை வழியாக செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் 15ம் தேதி வரை ரத்து
தென்காசி சங்கரநாராயணசுவாமி கோயிலில் அமைச்சர் சேகர் பாபு இன்று திடீர் ஆய்வு
துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தைகளின் புகைப்படங்கள்..!!
பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!