கிண்ணக்கொரை சாலையில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு
2022-12-02@ 11:54:13

மஞ்சூர்: மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள தாய்சோலா, கேரிங்டன், கிண்ணக்கொரை பகுதிகளில் சமீபகாலமாக காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு மாடுகள் கூட்டம், கூட்டமாக தேயிலை தோட்டங்களுக்கிடையே மேய்ச்சலில் ஈடுபடுவதால் இலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடனேயே பணிக்கு சென்று வருகின்றனர். சமீபத்தில் கேரிங்டன் பகுதி தேயிலை தோட்டத்தில் இலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்களை காட்டு மாடு ஒன்று விரட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக வனப்பகுதிகள், தோட்டங்கள் பசுமைக்கு திரும்பியுள்ளது. சாலையோரங்களிலும் புற்கள் அதிகளவில் வளர்ந்து செழிப்பாக காணப் படுவதால் தற்போது காட்டு மாடுகள் மேய்ச்சலில் ஈடுபட வேண்டி சாலைகளில் நடமாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, கேரிங்டன் முதல் கிண்ணக்கொரை தணயகண்டி பகுதிவரை சாலை அடர்ந்த வனப்பகுதியில் நடுவே அமைந்துள்ளதால் இச்சாலையில் பகல் நேரங்களிலேயே காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
சாலையில் ஆங்காங்கே மேய்சலில் ஈடுபட்டும், ஓய்வெடுத்த நிலையில் காட்டு மாடுகள் காணப்படுவதால் இவ்வழியாக வாகனங்களில் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் எச்சரிக்கையுடனும் காட்டு மாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் செய்திகள்
வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா
தண்ணீர் வரத்து குறைந்ததால் கவியருவி மூடப்பட்டது
கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது; களக்காடு பகுதியில் 20 வகையான நீர் பறவைகள்
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டி: அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தனர்
தாளவாடி மலைப் பகுதியில் மின் கம்பத்தை சேதப்படுத்திய காட்டு யானை: சிசிடிவி வீடியோ பரபரப்பு காட்சி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!