SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஞ்சபூதங்களின் அடிப்படையில் இயற்கை மருத்துவத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் மண் சிகிச்சை: மூலிகை தைலங்களும் நோயை குணமாக்கும்

2022-12-02@ 11:38:50

மதுரை: பஞ்சபூதங்களின் அடிப்படையில் இயற்கை மருத்துவ முறையில், உடல் உபாதைகளுக்கு மண் மூலம் சிகிச்சை அளிக்கலாம். மூலிகை தைலங்கள் மூலமும் குணமாக்கலாம் என மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் பஞ்சபூதங்களின் அடிப்படையில் இயற்கை மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நமது உடல், பஞ்சபூதங்களின் கலவையாக உள்ளது.

பஞ்சபூதங்களில் ஒன்றான மண் மூலம் தோல் உள்ளிட்ட உடல் உபாதைகள் குணமாகின்றன. மண் உறிஞ்சும் தன்மை உள்ளது. இந்த தன்மையை பயன்படுத்தி, பல தரப்பட்ட நோய்களுக்கு மண் சிகிச்சை அளித்து வருகின்றனர். பக்க விளைவுகள் இல்லை. மண்ணின் மற்றொரு குணம் குளிர்ச்சித் தன்மை. மண்ணை பதப்படுத்தி உடம்பில் பூசும்போது குளிர்ச்சி கொடுக்கிறது. இதன்மூலம் நிறைய பலன் பெறலாம். இந்த சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மண், சாதாரண மண் கிடையாது. நிலத்தில் இருந்து மண்ணைத் தோண்டி எடுக்கும்போது அதில் நிறைய கிருமிகள் இருக்கும். இதை சிகிச்சைக்கு பயன்படுத்த முடியாது.

கடல் மண், ஆற்றுமண் ஆகியவை மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்த முடியாது. களிமண், செம்மண் ஆகியவையே மருத்துவ சிகிச்சைக்கு ஏற்றதாகும். இவை நிலத்தில் 4 அடி முதல் 5 அடி ஆழம் வரை தோண்டி, அதிலிருந்து எடுக்கப்பட்டு, பின்னர் சிறு கல் துகள்களை அலசி நீக்கி, சுத்தம் செய்து நீரில் 24 மணி நேரம் ஊற வைத்து பின் அந்த மண்ணை பதப்படுத்தி, மாவு பதத்திற்கு தயார் செய்து சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

இது குறித்து மதுரை அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவம் மற்றும் வாழ்வியல் பிரிவு துறை மருத்துவர் நாகராணி நாச்சியார் கூறுகையில், ‘இயற்கை மருத்துவத்திற்கு தயார் செய்த மண்ணை உடம்பின் தோல் பகுதியில் நேரடியாக பூசலாம். கண், வயிறு ஆகிய உடம்பின் வெளிபாகங்களில் பேக் முறையிலும் மற்றும் உடல் முழுவதும் பூசிக் கொள்ளலாம். பிறகு வெயிலில் உட்கார்ந்து மண் காய்ந்த பின், சிலமணி நேரம் கழித்து பூசிய மண்ணை அகற்றி சுத்தமாக்கலாம். இந்த மண் சிகிச்சை மூலம் உடம்பின் ஆரோக்கியம் மேம்படும். இந்த சிகிச்சை மூலம் உடம்பின் கழிவுகள் முற்றிலும் அகற்றப்படுகிறது. ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. உடம்பிற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. தோல் பகுதி பொலிவு பெறும். பளபளப்பாக மாறும். கை, கால் வலி மற்றும் வீக்கம் சரியாகும். சில தோல் பிரச்னைக்கு மண் சிகிச்சை மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

ஆனால், அனைத்து தோல் பிரச்னைக்கும் மண் சிகிச்சை தர இயலாது. குறிப்பாக தோலில் ஏற்படும் வெளிக்காயங்கள் இருந்தால், சிகிச்சை அளிக்க முடியாது. மதுரை அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவ துறையில், சராசரியாக ஒரு வாரத்தில் 50க்கும் அதிகமான பலதரப்பட்ட உடல் உபாதை நோயாளிகள் மண் சிகிச்சை மூலம் குணமடைகின்றனர். மேலும், இல்லம்தோறும் இயற்கை மருத்துவம் என்ற அடிப்படையில் பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே இயற்கை மருத்துவ முறையை மருத்துவரின் தகுந்த ஆலோசனைக்கு பிறகு எளிதாக பின்பற்றி நோய் தாக்கம் ஏற்படாமல் தடுக்கலாம். இந்த மண் சிகிச்சை முறையை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வாரம் 2 முறை பின்பற்றலாம். மூட்டு வலி, வீக்கம் போன்ற பிரச்னைகள் மண் சிகிச்சை மூலம் சரியாகும்’ என்றார்.

மூலிகை தைலங்கள் மூலம் சிகிச்சை
மதுரை அரசு மருத்துவமனையின் இயற்கை மருத்துவ பிரிவில், அத்தியாவசிய மூலிகை மருத்துவ எண்ணெய் என்னும் நறுமண மூலிகை தைலங்கள் மூலம் பல்ேவறு உடல் உபாதைகள் தீர்க்கப்படுகின்றன. மூலிகைச் செடிகளில் இருந்து இவை பெறப்பட்டு, இவை செறிவூட்டப்படுகிறது. பெப்பர் மின்ட் ஆயில் தோல் நோய் தீர்க்கும். லாவண்டர் ஆயில் மனக்கவலை போக்கி, தூக்கத்தை சீராக்கும். ரோஸ்மேரி ஆயில் எலும்பு தேய்மானத்தை சரிசெய்யும். லெமன்கிராஸ் ஆயில் மலச்சிக்கல் நீக்கும்.

யூகலிப்டஸ் ஆயில் நுரையீரல் பிரச்னைகள், பேஷல் ஆயில் மனஅழுத்தம், அஜ்வயின் ஆயில் முழங்கால் வலி, கேம்பர் ஆயில் தோல் வியாதிகள், இருமல், சளி, நீம் ஆயில் புண்கள், தோல் நோய்களுக்கு மருந்தாகவும் உதவுகிறது. இவை மதுரை அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த எண்ணெய் வகையை, அப்படியே பயன்படுத்தாமல் தேய்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பாதம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் கலந்து மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு பயன்படுத்துவது சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • orange-tree-wishes-27

    ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

  • pet-fesitival-mumbai

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

  • france-reform

    பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

  • new-parliament-pic-20

    பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

  • cong-ravi-19

    தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்