மின்சார பந்தய காரை உருவாக்கிய ஐஐடி மாணவர்கள்: எரிபொருளில் இயங்கும் காரை விட சிறப்பாக செயல்படும்
2022-12-02@ 10:37:20

சென்னை: மின்சார வாகங்களை பொருத்தவரை ஒரு சிலவற்றில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சினைகள் அதன் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாகின்றன. முழுமையாக ஆராய்ச்சி செய்யதாதது இந்தியா சாலைகளுக்கு ஏற்ப மின்சார வாகனங்களை வடிவமைக்காதது பேட்டரி பேக்கப் சிஸ்டத்தின் குறைகள் இதுவே அதற்கு காரணம் என்று கூறப்படும் நிலையில் பந்தையங்களில் மின்சார கார்கள் பயன்படுத்தப்பட்டு வருவதே அதன் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் பார்முலா பந்தயங்களில் பயன்படுத்தப்படும் காரை மின்சார வாகனமாக வடிவமைத்து சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். ரஸ்தா என்ற குழுவைச் சேர்ந்த மாணவர்கள் பார்முலா பந்தய கார் வடிவமைப்பு உற்பத்தி சோதனை ஆகியற்றில் ஓராண்டுக்கு மேலாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் விளைவாக RFR-23 என்னும் மின்சார பந்தய கார் உருவாக்கப்பட்டுள்ளது.
எரிபொருளில் இயங்கும் பந்தய கார்களில் ஒப்பிடும் போது மின்சார பந்தய காரின் செயல்பாடு சிறப்பாக இருப்பதுடன் அதில் ஏற்படும் பிரச்சினைகளையும் எளிதில் சரி செய்ய முடியும் என ஐஐடி மாணவர் குழு கூறுகிறது. கோவையில் வரும் ஜனவரி மாதம் நடைபெறும் பார்முலா பார் நிகழ்வில் RFR-23 மின்சார பந்தய காரை இயக்கிய சென்னை ஐஐடி குழு மீண்டும் பங்கேற்க உள்ளது.
மேலும் அடுத்த ஆண்டு ஆகஸ்டில் ஜெர்மனியில் நடைபெறும் பார்முலா ஸ்டூடண்ட் ஜெர்மனி நிகழ்விலும் இந்த வாகனம் போட்டியிட உள்ளதாக ஐஐடி மாணவ்ர்கள் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபடுவோம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
ஆலந்தூர் பகுதி அதிமுக பொருளாளர் அ.லோகேஷ் தாயார் கஸ்தூரி மறைவு: இபிஎஸ் இரங்கல்; பா.வளர்மதி நேரில் அஞ்சலி
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத் துறை கட்டிடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?.. எதிர்பார்ப்பில் மக்கள்
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ1 லட்சம்
ரஷ்யாவில் நடக்கும் மாநாட்டில் ஏ.சி.சண்முகம் பங்கேற்கிறார்
பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் மீது போலீசில் புகார்: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!