பிரபல சினிமா தயாரிப்பாளர் முரளிதரன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
2022-12-02@ 10:11:07

சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவீ மேக்கர்ஸ்-இன் அதிபர்களுள் ஒருவரான கே. முரளிதரன் (66) மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியில்:
தமிழ்த் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவீ மேக்கர்ஸ்-இன் அதிபர்களுள் ஒருவரான கே. முரளிதரன் (66) நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
90'கள் தொடங்கித் தமிழில் பல நல்ல கதையம்சமுள்ள வெற்றிப்படங்களைத் தயாரித்து - தனக்கெனவும் தமது நிறுவனத்துக்கெனவும் தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட கே. முரளிதரன் தயாரிப்பாளர் சங்கத்திலும் ஆர்வத்துடன் செயல்பட்டார். மூத்த தயாரிப்பாளரான அவரது மறைவு திரையுலகுக்குப் பேரிழப்பு. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சென்னையில் பிப். 11ம் தேதி பிப்ரவரி மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிப்பு
ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாள் இலங்கை பயணம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபடுவோம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
ஆலந்தூர் பகுதி அதிமுக பொருளாளர் அ.லோகேஷ் தாயார் கஸ்தூரி மறைவு: இபிஎஸ் இரங்கல்; பா.வளர்மதி நேரில் அஞ்சலி
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத் துறை கட்டிடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?.. எதிர்பார்ப்பில் மக்கள்
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ1 லட்சம்
துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தைகளின் புகைப்படங்கள்..!!
பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!