ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளி போல் நடித்து டாக்டரிடம் ஐபோன் திருட்டு; பிரபல கொள்ளையன் கைது
2022-12-02@ 01:01:29

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 29ம் தேதி டவர் -1ல் உள்ள 111வது வார்டில் பெண் டாக்டர் ஒருவர் நோயாளிகளை பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது, மேஜையில் வைத்திருந்த அவரது விலை உயர்ந்த ஐபோன் மாயமானது. அதேபோல், அதே வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரின் செல்போனும் மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர் சம்பவம் குறித்து மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், அங்குள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், வியாசர்பாடி கக்கன்ஜி நகர் அண்ணா தெருவை சேர்ந்த பிரபல கொள்ளையன் முனியாண்டி (42) என்பதும், இவர் நோயாளி போல் நடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களின் செல்போன்கள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது.
சிறையில் இருந்து வெளியே வந்த மறுநாளே மீண்டும் மருத்துவமனையில் நோயாளி போல் நடித்து செல்போன் திருடியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் முனியாண்டியை நேற்று முன்தினம் கைது ெசய்தனர். விசாரணையில், பெண் டாக்டரின் செல்போனை திருடி குறைந்த விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து பெண் டாக்டரின் ஐபோன் உட்பட 2 போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
நெல்லை களக்காட்டில் ரூ1 கோடி வைடூரியக்கல்லுடன் சிக்கியவர்களிடம் தீவிர விசாரணை
பேஸ்புக் தோழிக்கு திருமண டார்ச்சர்: வாலிபர் கைது
திருச்சியில் ஏர் இந்திய விமான பயணியிடம் இருந்து ரூ.16 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
வில்வித்தை வீரர் அடித்துக்கொலை
கூலி தொழிலாளியை தாக்கி வழிப்பறி: சிறுவன் உள்பட இருவர் சிக்கினர்
போதையில் தகராறு: நண்பனுக்கு கத்திக்குத்து
துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தைகளின் புகைப்படங்கள்..!!
பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!