ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தில் ஸ்பிக் நிறுவனத்தில் ‘பாரத் யூரியா’ உரம் விநியோகம் தொடங்கியது
2022-12-02@ 00:28:22

தூத்துக்குடி: ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தில் முதல்முறையாக தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் பாரத் யூரியா உரம் விநியோகம் தொடங்கியது. இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் உரமான யூரியாவின் விலை ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. அரசு நிர்ணயம் செய்யும் விலையில் அதை நிறுவனங்கள் விற்கின்றன. உரங்களின் உற்பத்திச் செலவில் 80-90 சதவீதத்தை உற்பத்தியாளர்களுக்கு அரசு மானியமாக வழங்குகிறது. யூரியா தவிர, டிஏபி, எம்ஓபி போன்ற உரங்களின் விலையை அதிகாரப்பூர்வமாக அரசு கட்டுப்படுத்துவதில்லை. ஆனாலும் அதற்கும் மானியம் தரவேண்டியுள்ளது.
ஒரே கட்டணம் மற்றும் ஆண்டு முழுவதும் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தியா முழுவதும் யூரியா, டிஏபி, எம்ஓபி மற்றும் என்பிகே போன்ற உரங்களை தயாரிக்கும் எல்லா உர நிறுவனங்களும், ‘பாரத்’ என்ற பொது பெயரில்தான் உரத்தை விற்க வேண்டும். மேலும், உர மானியத் திட்டத்தை குறிக்கும் முத்திரை, பிரதான் மந்திரி பாரதிய ஜானுர்வர்க் பரியோஜனா என்ற முத்திரைதான் உர மூட்டைகளில் பயன்படுத்தப்பட வேண்டும். நிறுவனங்கள் தங்கள் பெயர், பிராண்ட், முத்திரை மற்றும் பிற தொடர்புடைய தயாரிப்புத் தகவல்களை தங்கள் பைகளில் மூன்றாவது பட்டியில் மட்டுமே அச்சிட அனுமதிக்கப்படுகிறது.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்பிக் நிறுவனம், இந்தியாவில் முதன்முதலாக பாரத் யூரியாவை தமது உற்பத்தியின் வாயிலாக விநியோகம் செய்கிறது. இதன் தொடக்க விழா, ஸ்பிக் ஆலையில் நடைபெற்றது. பின்னர் ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ஒரே நாடு ஒரே உரம் என்ற கொள்கை அடிப்படையில் பாரத் யூரியாவை ஸ்பிக் ஆலையில் தினமும் 2 ஆயிரம் டன் உற்பத்தி செய்கிறது. தமிழகத்தில் 5 மாவட்டத்திற்கு 2100 டன் பாரத் உர விநியோகத்தை தொடங்கி உள்ளது’ என்றார்.
Tags:
One Country One Fertilizer Scheme Distribution of 'Bharat Urea' Fertilizer by SPIG Corporation ஒரே நாடு ஒரே உரம் திட்டம் ஸ்பிக் நிறுவன ‘பாரத் யூரியா’ உரம் விநியோகம்மேலும் செய்திகள்
உலகின் மிகப் பிரமாண்டமான மஹா சிவராத்திரி விழா: ஈஷாவில் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற உள்ளது
100 நாள் வேலைவாய்ப்பு திட்ட நிதி ஒதுக்கீட்டை குறைத்த ஒன்றிய அரசை கண்டித்து மார்ச் 7ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: முத்தரசன் அறிவிப்பு
அனுமதியின்றி அதிமுகவினர் கூட்டம்: ஈரோடு மண்டபத்துக்கு சீல்
புதுச்சேரி சாராயக்கடைக்கு செல்ல ஆற்றில் செம்மண் சாலை அமைப்பு: பள்ளம் தோண்டி தடுத்த போலீஸ்
மதுரை வழியாக செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் 15ம் தேதி வரை ரத்து
தென்காசி சங்கரநாராயணசுவாமி கோயிலில் அமைச்சர் சேகர் பாபு இன்று திடீர் ஆய்வு
துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தைகளின் புகைப்படங்கள்..!!
பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!