வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் பவனி: கடும் குளிரிலும் பக்தர்கள் தரிசனம்
2022-12-02@ 00:28:21

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 5ம் நாள் உற்சவ விழாவில் வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத்திருவிழாவின் 5ம் நாள் உற்சவத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
காலை 11 மணியளவில், கண்ணாடி ரிஷப வாகனத்தில் விநாயகரும், சந்திரசேகரரும் எழுந்தருளி, பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வண்ண மின் அலங்காரம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்ட வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையாரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி மாடவீதியில் பவனி வந்தனர். தீபத்திருவிழா உற்சவத்தின்போது, அண்ணாமலையார் பவனி வரும் வாகனங்களில் மிக பிரமாண்டமானது வெள்ளி பெரிய ரிஷப வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது. கடும் குளிரையும், பனியையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Tags:
Velli Big Bull Vehicle Annamalaiyar Bhavana Devotees Darshan வெள்ளி பெரிய ரிஷப வாகன அண்ணாமலையார் பவன பக்தர்கள் தரிசனம்மேலும் செய்திகள்
உலகின் மிகப் பிரமாண்டமான மஹா சிவராத்திரி விழா: ஈஷாவில் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற உள்ளது
100 நாள் வேலைவாய்ப்பு திட்ட நிதி ஒதுக்கீட்டை குறைத்த ஒன்றிய அரசை கண்டித்து மார்ச் 7ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: முத்தரசன் அறிவிப்பு
அனுமதியின்றி அதிமுகவினர் கூட்டம்: ஈரோடு மண்டபத்துக்கு சீல்
புதுச்சேரி சாராயக்கடைக்கு செல்ல ஆற்றில் செம்மண் சாலை அமைப்பு: பள்ளம் தோண்டி தடுத்த போலீஸ்
மதுரை வழியாக செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் 15ம் தேதி வரை ரத்து
தென்காசி சங்கரநாராயணசுவாமி கோயிலில் அமைச்சர் சேகர் பாபு இன்று திடீர் ஆய்வு
துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தைகளின் புகைப்படங்கள்..!!
பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!