ரேஷன் பொருட்களை கடத்த முயன்ற 191 பேர் கைது
2022-12-02@ 00:27:51

சென்னை: நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்க கடத்த முயன்ற 191 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு பொது விநியோகத்திட்டம், சிறப்பு பொது விநியோக திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 21.11.2022 முதல் 27.11.2022 வரையிலான ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ.11,73,395 மதிப்புள்ள 1809 குவிண்டால் பொது விநியோக திட்ட அரிசி மற்றும் மண்ணெண்ணெய் 87 லிட்டர், 72 எரிவாயு உருளை, துவரம் பருப்பு 3520 கிலோ ஆகியவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 47 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 191 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்
அரசு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
கல்லூரி அருகே கஞ்சா விற்ற இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
மண்எண்ணெய் ஊற்றி மனைவி எரித்து கொலை கணவனுக்கு ஆயுள் சிறை
கத்திமுனையில் மிரட்டி ஓட்டல் ஊழியரிடம் வழிப்பறி
நகை திருடிய வேலைக்கார பெண் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!