SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடன பெண்ணுடன் கணவன் குத்தாட்டம் போட்டதால் 2 வயது மகனை கொன்று தாய் தற்கொலை: குடும்ப தகராறில் விபரீத முடிவு

2022-12-01@ 19:35:42

கான்பூர்: கான்பூர் அருகே திருமண விழாவில் நடன பெண்ணுடன் கணவன் குத்தாட்டம் போட்டதால் ஆத்திரமடைந்த அவரது மனைவி, தனது மகனை கொன்று தற்கொலை செய்து கொண்டார். உத்தரபிரதேச மாநிலம் மஸ்வான்பூரைச் சேர்ந்த மசாலா நிறுவன விற்பனையாளர் விஷால் - சீமா தம்பதிக்கு, கடந்த 2019ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தம்பதியர், குடும்பத்தாரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். அப்போது திருமண விழா மேடையில் ஆட்டம் போட்ட பெண் நடனக் கலைஞருடன், விஷாலும் சேர்ந்து ஆட்டம் போட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சீமா, அவரை மேடையில் இருந்து இழுத்து கீழே இறக்கினார். வீட்டிற்கு வந்ததும், இது தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. பின்னர் வழக்கம் போல், விஷால் தனது பணிக்காக வெளியூர் சென்றார். வீட்டில் மனைவி சீமாவும், அவரது 2 வயது மகன் மனனும் தனியாக இருந்தனர். ஆனால் வீட்டின் கதவு உள்தாழிட்டு பூட்டப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் திறக்கவில்லை. தகவலறிந்த போலீசார் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, தனது 2 வயது மகனை மின்சார வயரால் கழுத்தை ெநரித்துக் கொன்றுவிட்டு, சீமா தூக்கில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த போலீசார், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் ஏசிபி விகாஸ் குமார் கூறுகையில், ‘இறந்த பெண்ணின் மாமனார், மாமியார், கணவர் மற்றும் மைத்துனர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன் தம்பதிகள் திருமண விழாவிற்கு சென்றனர். அங்கு நடனமாடிய பெண்ணுடன், விஷாலும் சேர்ந்து ஆட்டம் போட்டுள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்