பேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் காதலியுடன் குடும்பம் நடத்திவிட்டு மற்றொரு பெண்ணுடன் திருமணம்: வாலிபர் சிறையில் அடைப்பு
2022-12-01@ 17:40:49

பெரம்பூர்: சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண், செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது; கடந்த 2018ம் ஆண்டு வியாசர்பாடி சர்மா நகர் எஸ்ஏ.காலனி பகுதியை சேர்ந்த பார்த்திபன் (21) என்பவருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதன்பின்னர் இருவரும் காதலித்து வந்தோம். ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த நிலையில், பார்த்திபன் வீட்டில் யாரும் இல்லாதபோது என்னை அங்கு வரவழைத்து தாலி கட்டினார். இதன்பின்னர் கோவளம் பீச்சுக்கு அழைத்துச்சென்று அங்கு வைத்து பலமுறை உடலுறவு கொண்டார். இதன்பிறகு என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்.
எனவே பார்த்திபனிடம் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். இதன் அடிப்படையில், செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்பிகா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், பார்த்திபனுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளதும் இதன்காரணமாக தான் காதலித்துவந்த பெண்ணை திருமணம் செய்ய முடியாது என்று பார்த்திபன் கூறியதும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று மாலை பார்த்திபனை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு பார்த்திபனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
கும்பகோணத்தில் தொடர்செல்போன் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
ஊட்டி நகரில் இளம் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய மூவர் கைது
இரணியல் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.4.5 லட்சம் மது கொள்ளை-சிசிடிவி பதிவுகளையும் எடுத்துச் சென்றனர்
பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் விஏஓவுக்கு 4 ஆண்டு சிறை: ரூ.20 ஆயிரம் அபராதம்
வாடிக்கையாளர்கள் போல் நடித்து மசாஜ் சென்டர் ஊழியர்களிடம் 4 சவரன், 5 செல்போன், பணம் பறிப்பு: மர்ம கும்பலுக்கு வலை
அழகியை பழக வைத்து தொழிலதிபரிடம் பணம் பறித்த பெண் உள்பட 4 பேர் கைது: கார், பைக் பறிமுதல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!